தத்துவம் மச்சி தத்துவம்





‘‘என் கணவர் தூக்கத்திலே நடக்கிறார் டாக்டர்..!’’
‘‘வாசல் கதவை பூட்டி வைங்க...’’
‘‘அவரு நடக்கிறது அவங்க ஆபீஸ்லதானே!’’
- டி.சேகர், திருத்துறைப்பூண்டி.

‘’தலைவர் மேடையில பேசறப்ப தன் காதை பொத்திக்கிட்டு ஏன் பேசுறாரு..?’’
‘‘அவர் பேச்சு அவரே கேட்க முடியாத படி ஆபாசமா இருக்குதாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

என்னதான் நகைக்கடைக்காரரா இருந்தாலும், அவரோட கிட்னியிலயும் வெறும்கல்தான் உருவாகுமே தவிர, வைரக்கல் உருவாகாது!
- கேசரி மென்றபடி வைரக்கல் பேசரியை
வேடிக்கை பார்ப்போர் சங்கம்
- ஜே.தனலட்சுமி, கோவை.

‘‘ஏட்டய்யா... என்னைப் பார்த்தா காமெடியன் மாதிரியா இருக்கு?’’
‘‘எதுக்கு கபாலி டென்ஷனாகுறே..?’’
‘‘திருடப் போன வீட்டுல நான் கத்தியைக் காட்டுனா, அதைப் பார்த்துட்டு ‘என்ன விலை’ன்னு கேக்கறாங்களே...’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘ஏன் உங்களை இப்ப டிஸ்சார்ஜ் பண்ண வேண்டாம்ங்கறீங்க..?’’
‘‘நர்சுக்கும் எனக்கும் இன்னும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகலையே டாக்டர்!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

நெட்ல மேயறான்னு மனுஷனைச் சொல்லலாம். எட்டுக்கால் பூச்சியை சொல்ல முடியுமா?
- முடிந்ததைக்கூட முடிந்தவரை முடியாது என தட்டிக் கழிப்போர் சங்கம்
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

கார் நம்பர், பைக் நம்பரை ஃபேன்சியா வாங்கலாம். ஏன், செல் நம்பர்கூட ஃபேன்சியா வாங்கலாம். ஆனா ஜெயில்ல கைதி நம்பர் ஃபேன்சியா வாங்க முடியுமா?
- சுறுசுறுப்பான சூழ்நிலைக் கைதிகள் சங்கம்
- பூவேந்தரசு, கம்பைநல்லூர்.