பரத்பாலா டைரக்ட் பண்ற ‘மரியான்’ல தூத்துக்குடியில முத்துக் குளிக்கிற கேரக்டர்ல நடிக்கிறாராம் தனுஷ். அங்கே ஆரம்பிக்கிற கதை, ஆப்ரிக்கா போய் முடியுதாம். எதிர்நீச்சல் போடத் தெரிஞ்சவர்ங்கிறதால கரையேறிடுவார் அவர்.
அதே தூத்துக்குடியில இன்னொரு அட்ராக்ஷனா போய்க்கிட்டிருக்கிற ‘சிங்கம் 2’ல ‘ஆடட் அட்ராக்ஷனா’ அனுஷ்காவும் ஜாய்ன் பண்ணியிருக்காங்க. விடுமுறையோட, ஒரு ஓய்வுக்குப்பின் மீண்டும் அனுஷ்க், ‘காட் ரெடி ஃபார் தி ஷோ..!’
‘ஆதிபகவன்’ பாடல்கள் சூப்பரா வந்திருக்கிறதாலயும், படமே ஸ்டைலிஷ்ஷானதுன்னு உணர்த்தவும், படத்துக்கு இசையமைச்ச யுவனை வச்சு பட புரொமோஷனுக்காக ஒரு இசை ஆல்பம்
ஷூட் பண்ண இருக்கிறாராம் அமீர்.
ஆனா அதை டைரக்ட் பண்ணப்போறது அவர் இல்லை. எஸ்.டி.சபா..!
ஷாருக் கானோட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துல தமிழ்நாட்டுப் பெண்ணா நடிக்கிற ஹீரோயின் தீபிகா படுகோனேவுக்கு அப்பாவா நடிக்க சத்யராஜைக் கேட்டிருந்தாங்க. ஆனா ‘அமைதிப்படை 2’ல பிஸியாகிட்ட அவர், ஷாருக்குக்கு ‘நோ’ சொல்லிட்டாராம்.
‘காதலில் விழுந்தேன்’ படத்துக்குப் பின் லாங் கேப் விட்டு ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ மூலமா திரும்பி வந்த டைரக்டர் பி.வி.பிரசாத், அடுத்து தான் டைரக்ட் பண்ற படத்துல அவரே ஹீரோவா நடிக்க இருக்கிறாராம். செய்யலாம், தப்பில்லை..!
‘காசி’ வினயன் ரொம்பவே முன்னேறி தமிழின் முதல் ‘டிராகுலா 3டி’ படமா ‘நான்காம் பிறை’யை முடிச்சிருக்கார். ஹாலிவுட் படங்களுக்கு இணையா இருக்க ஸ்டீரியோ ஒலிப்பதிவுக்கு லண்டன்லேர்ந்து டியானா சில்விஸ்டர்ங்கிற டெக்னீஷியனை வரவழைச்சு வேலை வாங்கியிருக்கார். மிரட்டுறாரே..?
பாலுமகேந்திராவோட ஃபேவரிட் ஆக்டர் பானுசந்தரை நினைவிருக்கில்ல..? இப்ப அவரோட வாரிசு ஜெயந்த், ‘நீங்காத எண்ணம்’ மூலமா சினிமாவுக்கு வர்றார். ‘ஐ லவ் யூ ரஸ்னா’ புகழ் அங்கிதா ரிடையர்ட் ஆகிட்ட ஃபீல்டுல புது அங்கிதா இதுல ஜெயந்துக்கு ஜோடியாகிறார். வாங்க அறிமுகங்களா..!
‘வெள்ளை’ன்னு ஒரு டைட்டிலை வச்சு, ‘அது ஒரு கிராமத்தோட பேர். அங்கேயிருக்க மனிதர்களும் காந்தியை தெய்வமா வச்சு வெள்ளை உள்ளத்தோட வாழறாங்க’ன்னு கதை பண்ணியிருக்கார் டைரக்டர் ஜுகேன். உலகம் தெரியாத வெள்ளந்தி மனிதரோ..?
ஹாலிவுட் படம் ஒண்ணு தமிழ்நாட்டுல, அதுவும் தமிழ்ல முதல்ல ரிலீசாகுது. ‘ரகசியத் தீவு’ன்னு டைட்டில் வச்சிருக்க படத்தோட ஒரிஜினல் டைட்டில் ‘அட்வென்ச்சர்ஸ் இன் சீக்ரட் வேர்ல்ட்’. டைனோசர்களும் இதில தமிழ் பேசறதைக் கேட்கலாமாம். அத சொல்லுங்க முதல்ல..!
- கோலிவுட் கோயிந்து
சைலன்ஸ்பெரிய டைரக்டர், தாண்டவ ஹீரோவோட சீனா போய் ஷூட் பண்ணிட்டிருக்க கதையும் ஒரு ஃபாரீன் படத்தோட இன்ஸ்பிரேஷனாம். அதுல தப்பில்லை... ஆனா அந்தப் படத்தை இந்தியாவில வெளியிடற உரிமையை மேற்படி படத்தோட தயாரிப்பாளர் தரப்பேதான் வச்சிருக்காம். அதை ரிலீஸ் பண்ணி வர்ற வருமானத்தைவிட இது லாபம்னு நினைச்சுட்டாங்களோ..? எப்படியும் அவங்கவங்க ‘கர்மா’வை அவங்கதானே சுமக்கணும்..?
ரெண்டு பெரிய ஹீரோக்களோட ப்ராஜக்ட்டுகளும் டிராப் ஆகிட்ட நிலைமையில, அடுத்த ப்ராஜக்ட்டைக் கைல வச்சுக்கிட்டு புரட்யூசரைத் தேடிக்கிட்டிருக்கிற பொன்வசந்த டைரக்டர், இன்னொரு பக்கம் சின்ன டைரக்டர்களுக்குத் தன் பேனர்ல வாய்ப்புக் கொடுக்கிறதுல மட்டும் ஆர்வமா இருக்காராம். அப்படி ‘நான்’ ஒரு டைரக்டர்னு போய் நின்னவருக்கு சான்ஸ் கொடுத்திருக்கார் இவர். ‘சாமியே சைக்கிள்ல போகுதாம்...’