‘‘பங்கஜம்... நீ செய்யற மைசூர்பாகு மாதிரியே இருக்கு எங்க கட்சி...’’
‘‘ரொம்ப ஸ்வீட்டானதுன்னு சொல்ல வர்றீங்களா..?’’
‘‘எந்தக் கொம்பனாலும் உடைக்க முடியாதுன்னு சொல்ல வர்றேன்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
என்னதான் ஸ்ரீஹரிகோட்டாவுல வேலை செய்யற விஞ்ஞானியோட மகனா இருந்தாலும் தீபாவளிக்கு சிவகாசியில செஞ்ச
‘ராக்கெட்’டைத்தான் விடணும்.
- பட்டாசுக் கடைக்காரர் பெண்ணுக்கு பி‘ராக்கெட்’ போட்டு புஸ்வாணமாகிப் போனோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘என்னய்யா வெடி வேணும்?’’
‘‘ஹன்சிகா மாதிரி அழகா, சிவப்பா, பருமனா எதுன்னா கொடுங்க கடைக்காரரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘தலைவர் எதுக்கு அப்துல் கலாமுக்கு கால் பண்ணச் சொல்றார்..?’’
‘‘அவர் வாங்கின ராக்கெட் வெடி சரியா வெடிக்கலையாம்..!’’
- அ.ரியாஸ், சேலம்.
என்னதான் பட்டாசுல மருந்து இருந்தாலும், அதை மெடிக்கல் ஸ்டோர்ல விற்க மாட்டாங்க!
- பட்டாசு மருந்தை வைத்து தீபாவளி விருந்தை வைக்க முயற்சிப்போர் சங்கம்
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
‘‘பொண்ணுக்கு தலை தீபாவளி ஆச்சே... என்ன எடுத்தீங்க?’’
‘‘மாப்பிள்ளையை ஜாமீன்ல எடுத்தேன்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘தீபாவளிக்கு மறுநாளே மீட்டிங் போட்டது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘வீட்ல மீந்து போன பலகாரங்களை எல்லாம் எடுத்து வந்து, தலைவர் மேல வீச ஆரம்பிச்சிட்டாங்க...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.