ஜோக்ஸ்

‘‘தீபாவளிக்கு உன்னை ‘லட்டு’ செய்ய வேணாம்னு சொன்னா கேட்டியாடீ..?’’
‘‘ஏங்க... என்னாச்சு?’’
‘‘எவனோ கிளப்பி விட்ட வதந்தியை நம்பி, ‘உங்க மனைவி வீட்ல வெடிகுண்டு தயாரிக்கிறாங்களாமே...’ன்னு ஏட்டய்யா வந்து விசாரிச்சுட்டுப் போறாரு!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘தலைவர் ரொம்ப பயந்த சுபாவம்...’’
‘‘அதுக்காக பட்டாசு வெடிக்க புல்லட் புரூப் டிரஸ் வாங்கறது நல்லா இல்ல..!’’
- அம்பை தேவா, சென்னை-114.

‘‘வேலை நேரத்துல பட்டாசு வெடிச்சதுக்குப் போய் உன்னை
வேலையை விட்டுத் தூக்கிட்டாங்கன்னு சொல்றியே... நீ எங்க வேலை செய்ற?’’
‘‘பெட்ரோல் பங்க்ல!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

தீபாவளிக்கு எல்லோரும் சங்கு சக்கரத்தை கொளுத்தத்தான் ஆசைப்படுவாங்க. கார் சக்கரத்தை கொளுத்த யாரும் ஆசைப்பட மாட்டாங்க!
- வன்முறை வெடிக்கும்போது கோபத்தோடு எதையாவது கொளுத்துவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘என்னய்யா... இந்த ராக்கெட் மேலயே பறக்க மாட்டேங்குது?’’
‘‘அதுக்கு அந்தரத்துல மிதக்கற ‘குண்டலினி சக்தி’ குறைவா இருக்கும் சார்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.