தீபாவளி தத்துவம்





‘‘நீங்க வேலை செய்யற ஆபீஸ்ல தீபாவளி போனஸே கொடுக்கக் கூடாதுன்னு ஏன் சார் வேண்டிக்கறீங்க..?’’
‘‘பணத்தைப் பார்த்ததும் என் மனைவி தீபாவளிக்கு பலகாரம் செய்ய ஆரம்பிச்சுடுவாளே..!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘தலைவர் எதுக்கு ‘கம்பி’ மத்தாப்பை தடை செய்யணும்ங்கறார்?’’
‘‘பேரைக் கேட்டாலே ஜெயில் ஞாபகம் வருதாம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘கபாலிக்கு பக்தி அதிகம்னு எப்படிச் சொல்றே?’’
‘‘பட்டாசுக் கடைக்கு திருடப் போனா, முதல்ல லட்சுமி வெடியை தொட்டுக் கும்பிட்டு திருடிட்டு, பிறகுதான் மத்த வெடிகளைத் திருடுவான்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘சி.பி.ஐ. காரங்க ஏன் தலைவர் மேல ரொம்ப கோபமா இருக்காங்க..?’’
‘‘தலைவர் வீட்டுக்கு அவங்க ரெய்டுக்கு வரும்போது தீபாவளி
இனாம் கொடுத்தாராம்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு வாங்கலாம்; ராக்கெட்டுல ஜன்னல் வச்சு வாங்க முடியுமா?
- ரவிக்கை போடாத பெண்களை ரவுசு பண்ணுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘தீபாவளிக்கு ரிலீஸ் கிடையாதாம்... பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகறது சந்தேகம்தானாம்!’’
‘‘எந்தப் படம்..?’’
‘‘படம் இல்ல, ஜெயில்ல இருக்கற நம்ம தலைவர்..!’’
- அ.ரியாஸ், சேலம்.

கர்நாடகம் காவிரித் தண்ணீர் தர்றவரைக்கும், ஏன் தமிழ்நாட்டில் மைசூர்பாகுக்கு தடை விதிக்கக் கூடாது?
- பலகாரத்தில் நெய்க்கு பதிலாக பாலிடிக்ஸை கலப்போர் சங்கம்
- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.