
திருப்பதி சென்று வேண்டுதல் நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார் விரைவிலேயே 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற செய்தி ரசிகர்களுக்கு தீபாவளி ஸ்வீட்!
- எம்.மிக்கேல்ராஜ், விருதுநகர்.

Q&A பகுதியில் காவல்துறை நினைத்தால் ஆபாச நடனத்தினை தடுத்து நிறுத்த முடியும் என்ற உரிய பதிலை ஐ.ஜி.சைலேந்திரபாபு தந்துள்ளார். சரியான நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சியே!
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

'நாங்க நண்பேன்டா!' பகுதியில் 'சினிமாவில் உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் யார்?' என்ற கேள்விக்கு புகழ்பெற்ற நட்சத்திரங்களிடம் பதில் வாங்கியது வித்தியாசமாக இருந்தது.
- சி.டி.குருநாதன், திருச்சி.

'பவர் ஸ்டார்' டாக்டர் சீனிவாசனின் ஜாலி பேட்டியைப் படித்து சிரிப்பு தாங்கவில்லை. 'பவர் ஸ்டாராவே இருந்துடாதே... நீயும் ஒருநாள் சூப்பர் ஸ்டாராகணும்' என்று டாக்டர் தன் முகத்தை காலையில் கண்ணாடியில் பார்க்கும்போது நினைத்துக்கொள்வது அதில் உச்சகட்ட ஹைலைட்!
- ஜி.கணேசன், சிவகங்கை.

'மாந்தோப்புக் கிளியே' படத்தின்போது 'பிரேக்' என்ற ஒரே ஒரு வார்த்தையை தவறான இடத்தில் பயன்படுத்தியதால் அவதிப்பட்ட நேஷனல் செல்லையா மீது எங்களுக்குப் பரிதாபம்தான் வந்தது.
- டி.அமராவதி, காஞ்சிபுரம்.

தீபாவளி ஜோக்ஸ் அனைத்தும் சரவெடி!
- டி. கவிதா ராஜன், விழுப்புரம்.

பாக்கியம் ராமசாமி எழுதும் 'சிரிப்பும் சிந்தனையும்' படிக்கும்போதே வாய் 'விட்டு' சிரிக்கும்படி இருக்கிறது!
- ஜி.வி.ஸ்டீபன் சார்லஸ்,மதுரை.

'உங்ககூட முதல் படத்தில் நடித்த சமந்தா இன்னைக்கு தெலுங்கில் உச்சத்தில் இருக்காங்க' என்ற கேள்விக்கு அதர்வா தன்னடக்கத்துடன் சொன்ன பதில் பாராட்டுக்குரியது.
- நெ.விமலநாதன், புதுச்சேரி.