பாலியல் தொல்லை! லவுட் ஸ்பீக்கரில் ஒலிக்கும் நடிகைகளின் அலறல்!
ஒட்டுமொத்த தேசமே அதிர்ந்து கையறு நிலையில் நிற்கிறது. காரணம் மலையாளத் திரையுலகம்.ஆம். தரமான கலை / கமர்ஷியல் படங்களை உருவாக்கும் அதே கேரள சினிமாவில்தான் அசிங்கமான இருட்டுப் பக்கமும் இருக்கிறது. இப்பக்கம் இப்பொழுதுதான் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதனால்தான் அதிர்ச்சி. குலுங்கல்.
என்ன விஷயம்?
ஒட்டுமொத்த தேசமே அதிர்ந்து கையறு நிலையில் நிற்கிறது. காரணம் மலையாள திரையுலகம்.ஆம். தரமான கலை / கமர்ஷியல் படங்களை உருவாக்கும் அதே கேரள சினிமாவில்தான் அசிங்கமான இருட்டுப் பக்கமும் இருக்கிறது. இப்பக்கம் இப்பொழுதுதான் வெளிச்சமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதனால்தான் அதிர்ச்சி. குலுங்கல்.
என்ன விஷயம்?
2017ம் ஆண்டு மலையாள முன்னணி நடிகை ஒருவரை ‘சிலர்’ கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்முறை செய்தது நினைவில் இருக்கலாம். செய்திகளில் பரபரப்பாக அடிப்பட்ட இந்த நியூஸ் தொடர்பாக, ‘உமன் இன் சினிமா கலெக்டிவ்’ என்ற அமைப்பு முன்வைத்த புகாரின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.ஹேமா மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.பி. வல்சலா குமாரி, திரைப்பட முன்னணி நடிகை சாரதா ஆகிய மூவர் கொண்ட குழு ஒன்றை கேரள மாநில அரசு அமைத்தது.
இந்தக் குழு, மல்லுவுட்டில் புழங்கும் பல்வேறு பெண்களின் மத்தியில் விசாரணை செய்து தனது விசாரணை அறிக்கையை 2019ம் ஆண்டு கேரள அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.
இதில் கவனிக்க வேண்டியது,2017ம் ஆண்டு மலையாள முன்னணி நடிகை ஒருவரை ‘சிலர்’ கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்முறை செய்தது நினைவில் இருக்கலாம்.
செய்திகளில் பரபரப்பாக அடிபட்ட இந்த நியூஸ் தொடர்பாக, ‘உமன் இன் சினிமா கலெக்டிவ்’ என்ற அமைப்பு முன்வைத்த புகாரின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.ஹேமா மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.பி. வல்சலா குமாரி, திரைப்பட முன்னணி நடிகை சாரதா ஆகிய மூவர் கொண்ட குழு ஒன்றை கேரள மாநில அரசு அமைத்தது.
இந்தக் குழு, மல்லுவுட்டில் புழங்கும் பல்வேறு பெண்களின் மத்தியில் விசாரணை செய்து தனது விசாரணை அறிக்கையை 2019ம் ஆண்டு கேரள அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. இதில் கவனிக்க வேண்டியது, பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டபோது அவர்களிடம், ‘உங்களது தனி உரிமையை பத்திரமாக பாதுகாப்போம்’ என இக்குழு உறுதி அளித்தே வாக்குமூலம் பதிவு செய்தது என்பதுதான்.
இதன் காரணமாகவே அவர்களின் தனி உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் 65 பக்கங்களில் திருத்தங்களை போடுவதற்கு கேரள அரசு கடந்த ஐந்து ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. அப்படித்தான் தாமதத்திற்கான காரணம் முன்வைக்கப்பட்டது.தற்போது கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமையினால் கொடூரமாக குதறப்பட்டு கொலை செய்யப்பட்டதை ஒட்டி நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ள நிலையில் வெளியாகி இருக்கும் இந்த அறிக்கை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த அறிக்கையில் வாக்குமூலம் கொடுத்த நடிகை ரஞ்சனி, ‘‘இந்த அறிக்கை வெளியிடப்படுவதன் மூலம் எனது தனி உரிமை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது...” என்று கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.ஆனால், இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே 235 பக்கம் கொண்ட நீதியரசர் ஹேமா குழுவினரின் அறிக்கை பல்வேறு ஊடகங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
ஐந்தாண்டுகளாக இந்த அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை என்பதற்கான காரணங்களாக கேரள அரசு நேர்மையான எந்த பதிலையும் அளிக்கவில்லை என்கிறார்கள். போலவே அறிக்கை வெளியானதும் சர்ச்சைகளும் வெடித்துள்ளன. முக்கிய குற்றவாளிகளின் பெயர் குறிப்பிடாமல் வெளியான இந்த அறிக்கையால் எந்தப் பலனும் இல்லை... இந்தச் சிக்கலைத் தீர்க்கும் எண்ணம் மாநில அரசிடம் இல்லை... என மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பலர் கொந்தளிக்கிறார்கள்.
இச்சூழலில் நீதியரசர் ஹேமா குழுவினரின் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்?
கேரள திரைப்பட உலகில் 30க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பணியாற்றுகின்ற பெண்களுக்கு 17 வகையான பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையின் சுருக்கம் தெரிவிக்கிறது.அது மட்டுமின்றி கேரள திரைப்பட உலகம் குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்கள், சில முன்னணி நடிகர்கள், சில இயக்குநர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதாகவும், கேரள திரைப்பட உலகத்தை மாஃபியாக்களைப் போல இவர்களே கட்டுப்படுத்தி வருவதாகவும் பகிரங்கமாக இந்த அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பாக திரைப்படத்துறையில் வேலை செய்யும் பெண்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
நாட்டிலேயே மிகவும் முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் கேரளாவில், கல்வி கற்றலில் முதன்மையாக இருக்கும் கடவுளின் தேசத்து திரைப்படத்துறையில் உள்ள பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது என்பதை இந்த அறிக்கை மெகா வாட் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இதுதான் புதையுண்டிருக்கும் இன்னொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. அறிவுக்கும் பண்புக்கும் பெயர் பெற்ற ‘லார்ட் லபக்குதாஸ்’ மாநிலமான கேரள திரைப்படத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கே இதுதான் நிலை என்றால்... இந்தியாவிலுள்ள மற்ற சினிமா துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு எவ்வளவு பாலியல் சுரண்டல் இருக்கும்; நிகழும்?
உண்மையில் திரைப்படத் துறையில் உள்ள பெண்கள் மட்டுமல்ல, நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்ற பெண்கள் அனைவரின் மீதும் பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பெண்களை போகப் பொருளாகவும், உணர்ச்சியற்ற சதைப் பிண்டமாகவும் கருதுகின்ற ஆணாதிக்க வக்கிர வெறி பிடித்த சமூகத்தில், சில பாலியல் மிருகங்கள் மத்தியில் வேலை செய்வதற்கு பணிக்கப்படும் பெண்கள் தனது குடும்ப சூழ்நிலை கருதி பல்வேறு துறையில் இதை சகித்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர்... அதற்கு ஒரு சோறு பதம்தான் நீதியரசர் ஹேமா குழுவினரின் அறிக்கை. வேலைக்குச் செல்லும் பெண்கள் மீது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்படுவதால் கடுமையான மன உளைச்சல்களுக்கு ஆளாகி நடைப்பிணமாகவே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ‘இவற்றையெல்லாம்’ அனுசரித்துக்கொண்டு சென்றால் மட்டுமே வேலையில் தொடர முடியும் என்ற கேடான நிலைமை இந்திய சமூக அமைப்பில் மிகப்பெரும் அவமானகரமான சூழலாக உள்ளது.
போதும் போதாததற்கு நவீன டிஜிட்டல் பயன்பாடுகளின் மூலம் பெண்களின் மீதான தாக்குதல்கள், சைபர் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.பெண்களின் விடுதலை சமூகத்தின் விடுதலையுடன் தொடர்புடையது என்பதால்தான் ‘சமூக விடுதலையே பெண் விடுதலை’ என்ற முழக்கத்தை சமூகவியலாளர்கள் முன்வைக்கிறார்கள்.
இதன் அடிப்படையில் கேரளாவில் வெளியிடப்பட்டுள்ள நீதியரசர் ஹேமா குழுவினரின் அறிக்கையை விவாதத்துக்கு உட்படுத்தி திரைப்படத் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளுக்காக ஆண்களும் போராட வேண்டும் என மனித உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் தவறாக நடந்தார்...
மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பிரபல மலையாள நடிகர் திலகனின் மகள் சோனியா திலகன் குற்றம் சாட்டுகிறார். திலகன்? தமிழ்த் திரையுலகமும் நன்கு அறிந்த நடிகர்தான். விஜயகாந்த் நடிப்பில் வெற்றி பெற்ற ‘சத்ரியன்’ படத்தில்... ‘வரணும்... பழைய பன்னீர்செல்வமா வரணும்...’ என வசனம் பேசுவாரே... அவர்தான் நடிகர் திலகன்.
ரைட். அவரது மகள் சோனியா என்ன சொல்கிறார்?
‘‘என் அப்பா திலகன், 2010ம் ஆண்டு முதலே மலையாளத் திரையுலகில் நடக்கும் சில மோசமான சம்பவங்கள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார். மலையாள சினிமா 15 பேர் அடங்கிய ஒரு மாஃபியா கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அப்போதே அவர் கூறினார். அதை இப்போது நீதியரசர் ஹேமா கமிஷன் உறுதி செய்துள்ளது. மலையாளத் திரையுலகில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து வெளிப்படையாகக் கூறியதால்தான் என்னுடைய தந்தையை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி அவருக்கு சினிமா, டிவியில் நடிக்கவும் தடை விதித்தார்கள்.
என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்துகொண்டதற்காக, தான் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்.மேலும் சில முக்கிய விவரங்களை தெரிவிக்கவேண்டி இருப்பதால் ‘தன்னுடைய அறைக்கு’ வருமாறு கூறினார். நான் அதற்கு மறுக்கவே போனில் சில ஆபாசத் தகவல்களையும் அவர் அனுப்பினார். அப்போதுதான் அவர் எதற்காக அறைக்கு அழைத்தார் என்பது எனக்குப் புரிந்தது. அந்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை நேரம் வரும்போது கூறுவேன்...’’ என்கிறார் சோனியா திலகன்.
கேரள அரசின் நடவடிக்கை என்ன?
நீதியரசர் ஹேமா கமிஷன் அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள பினராய் விஜயன், “மலையாள திரையுலகில் நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கும், நடிகைகள் வாங்கும் சம்பளத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தொடர்பான பிரச்னையில் கேரள அரசு தலையிடுவதாக இல்லை.
இந்த விஷயத்தில் கேரளத் திரையுலகட் பிரமுகர்களே கலந்து பேசி ஒரு சுமுகமான முடிவைக் காணவேண்டும். பாலியல் ரீதியான பிரச்னைகள் பற்றி ஹேமா கமிஷனில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது தொடர்பாக முறையான குற்றச்சாட்டு பதிவாகாத வரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது...” என்றார்.
கே.என்.சிவராமன்
|