ஒரே நாளில் சறுக்கிய ஹர்த்திக்!



மனைவி நடாஷாவும், தானும் பிரிந்துவிட்டதாக ஹர்த்திக் பாண்டியா அறிவித்த அதே நேரத்தில், இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்தும் அவர் கழற்றி விடப்பட்டுள்ளார்.
9ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஹர்த்திக், சிறுவயதில் கஷ்டப்பட்டவர். பயிற்சிக்குச் செல்லும் நாட்களில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் மேகி பாக்கெட்தான் அவருக்கும், அவரது சகோதரர் குர்ணாள் பாண்டியாவுக்கும் மதிய உணவு.

இதனாலேயே உல்லாசமான வாழ்க்கையின் மீது ஹர்த்திக் பாண்டியாவுக்கு காதல். இப்போதுள்ள இந்திய கிரிக்கெட் வீர்ர்களிலேயே மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்பவர் இவர் தான். இவரும் இவரது சகோதரரும் மும்பையில் வசிக்கும் அபார்ட்மெண்டின் விலை ரூ.30 கோடி. 

ஹர்த்திக் வைத்துள்ள ஒரு பைஜாமாவின் விலை ரூ.1.6 லட்சம். 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள வேறு பல சட்டைகளையும் வைத்துள்ளார். இப்படி மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் வாழ்க்கையை வாழ்ந்த பாண்டியாவுக்கு, இந்த ஆண்டு ஐபிஎல் முதலே நேரம் சரியில்லை. ஆடம்பர வாழ்க்கையின் மீதான மோகமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்.

காம்ஸ் பாப்பா