இந்தியர்களை பாதிக்கும் WLB!



இந்தியாவில், வொர்க் லைஃப் பேலன்ஸ் (WLB) இல்லாமல் 80% கார்ப்பரேட் ஊழியர்கள் கடந்த ஆண்டில் மோசமான மனநிலைக்குத் தள்ளப்பட்டதாக, ஆய்வு தெரிவிக்கிறது.
மொபைல் தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற மென்பொருள்களின் பயன்பாடு இப்போதைய கார்ப்பரேட் பணியிடங்களில் கட்டாயமாகிவிட்டது. அதனால் குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க நேரமில்லாமல் போய்விடுகிறது.

இதனைத்தான் சமீபத்தில், மென்டல் ஹெல்த் அண்ட் வெல்னெஸ் கோஷன்ட் @ வொர்க்பிளேஸ் - 2023 (Mental health and wellness quotient @ workplace 2023) எனும் மனநலம் சார்ந்த கணக்கெடுப்பு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக்கொள்ள இயலாமல் 81% மற்றும் குடும்பக் கடமைகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்று 75% ஊழியர்களும், தங்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக எம் பவர் ‌‌(MPower) நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் ஊழியர்களில் 48% மோசமான மன ஆரோக்கியத்தால், ஆபத்தில் உள்ளனர் என்றும்; குறிப்பாக பெண் ஊழியர்களின் இடையே இது அதிகமாக இருப்பதாகவும், 56% பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 50%க்கும் மேலானோர், மன அழுத்தம் தங்களின் உற்பத்தித் திறனை பாதிப்பதாக ஒப்புக்கொண்டனர்.

காம்ஸ் பாப்பா