சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் பொன்னியின் செல்வன் வானதியா..?
தெலுங்கு மீடியாக்கள் அப்படித்தான் கிசுகிசுக்கின்றன.‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘வானதி’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சோபியா துலிபாலாவுக்கும் நாக சைதன்யாவுக்கு இடையே நெருக்கமான உறவு இருந்ததாகவும் அவர்கள் வெளிநாட்டுக்குப் போன போது நெருக்கமாக பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அதற்கேற்ப அவர்கள் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்தன.
இவர்கள் இருவருக்குமிடையே இருந்த உறவுதான், சமந்தாவை குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி வர செய்ததாம். இது வரை சமந்தா எதுவும் கூறவில்லை. ஆனால், சோபியா திருவாய் மலர்ந்திருக்கிறார். ‘‘நான் எதுவும் தப்பு பண்ணாத போது தேவையில்லாத விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டும் என்று எனக்கு அவசியம் இல்லை...’’ என்கிறார் சோபியா.
நாக சைதன்யாவோ, ‘‘எனக்கு விவாகரத்து ஆனதற்கு காரணம் சோபியாதான் என்று சொல்வதைக் கேட்கும்போது ஏமாற்றமாக இருக்கிறது...’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். எது உண்மை..?
காம்ஸ் பாப்பா
|