ஷாக்!
உலகிலுள்ள விஞ்ஞானிகளையும், சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது சமீபத்திய ரிப்போர்ட் ஒன்று. இதை வெளியிட்டிருப்பது சர்வதேச வானியல் மையம். ‘‘முன்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது...’’ என்பதுதான் அந்த ரிப்போர்ட். 1990லிருந்து கடந்த 30 வருடங்களில் கடல் மட்டம் 10 செ.மீ அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பருவநிலை மாற்றம், அதிகரித்த பனிக்கட்டி உருகுதல் மற்றும் அதிக வெப்பம்தான் கடல் மட்டம் உயர்வதற்கான மூல காரணிகள் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.
2013 - 2022ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் 4.62 மி. மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. இதற்கு முந்தைய பத்து வருடங்களில் கடல் மட்டம் பாதியளவுதான் உயர்ந்திருக்கிறது. இப்போதிருக்கும் நிலையே தொடர்ந்தால் எதிர்காலத்தில் மனித குலம் பல ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும். அதனால் இப்போதிருந்தே எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புவி வெப்பமயமாகுதலுக்குக் காரணமாக இருக்கும் அனைத்துவிதமான மனிதச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
த.சக்திவேல்
|