மருத்துவமனையை உருவாக்கிய ஆசிரியர்கள்!



மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் இருக்கும் சிற்றூர்தான் அகோலே. கொரோனா இரண்டாம் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஊர்களில் இதுவும் ஒன்று.
25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அகோலேயில் 30 படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனை ஒன்று மட்டுமே இருந்தது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோ அதிகம். உள்ளூர் மருத்துவமனையில் இடம் கிடைக்காதவர்கள் புனே, நாசிக் போன்ற நகர்களுக்கு செல்ல வேண்டிய நிலை.

இதனைத் தவிர்க்க அகோலேயில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்தனர். சங்கம், வாட்ஸ் அப் வழியாக 1,100 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களைத் திரட்டி தலா ஆயிரம் என 11 லட்சம் ரூபாயும்; மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 12 லட்சம் ரூபாயும்; தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் 11 லட்சம் ரூபாயும் என மொத்தம் ரூ.34 லட்சம் திரட்டி 60 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உடனடியாக உருவாக்கி தங்கள் மக்களைக் காப்பாற்றி உள்ளனர்!

காம்ஸ் பாப்பா