வலைப் பேச்சு



@Raja_AnvarTwits - டீக்கடைகளில் கிளாஸை மட்டும் கழுவி ஊற்றுவதில்லை, அரசியல்வாதிகளையும் சேர்த்தே கழுவி ஊற்றுகிறார்கள்!

@ActorRajendran_ - 40 வயசுல வாழ்க்கையே முடிஞ்சுடும்னு சொல்லுவாங்க... எனக்கு 40 வயசுலதான் வாழ்க்கையே ஸ்டார்ட் ஆச்சு!

@Kozhiyaar - புரட்டாசி கடைசி  சனிக்கிழமை சாமி கும்பிட்டு விட்டு ஞாயிற்றுக்கிழமை கறி சாப்பிடலாம்னு எந்த ரூல்ஸ் புக் சொல்லுது!? என்ன Tricksஆ... பெருமாளுக்கே நாமம் போடுறீங்கப்பா!?

@maruthamuna - ஆடி கார்ல போறது வசதியான வாழ்க்கை அல்ல... ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை... என உலகத்திற்கே புரிய வைத்ததுதான் கொரோனா செய்த ஒரே நல்ல காரியம்.

@Kannan_Twitz - உலகம் மூன்று பக்கம் பணத்தாலும், ஒரு பக்கம் பாசத்தாலும் இயங்குது!

@Paadhasaari Vishwanathan - எந்த எதிர்பார்ப்பும் இல்லாதபோது மனதில் மரணபயம் மல்லாந்து தூங்குகிறது. ஏதாவது எதிர்பார்ப்புடன் இருக்கும்போது மனதில் மரணபயம் மெல்ல எட்டிப் பார்க்கிறது!

@Brindha Sethu - உலகில் எல்லாருக்கும் சமமாகக் கிடைத்திருப்பது 24மணி நேரம். இதில் எவ்ளோ மகிழ்வா இருக்க முடியுது என்பதுதான் ஹெல்த் & வெல்த்.

@vinothini_j - பாதையில் தடைகள் வந்தால் தகர்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை... அதனைத் தவிர்த்துவிட்டும் செல்லலாம்..!

@மணி ஜி - பாலு மாதிரியேதான் மனோவும் பாடறாரு. தாஸண்ணா மாதிரியேதான் உன்னி மேனன், பாலகிருஷ்ணன் எல்லாரும் பாடறங்க... என்ன வித்தியாசம்?பிரியாணிக்கும் குஸ்காவுக்கும் இருக்கும் வித்தியாசம்தான்!

@Sen Balan - பழைய ஆட்சியாளர்கள் அப்போதைய தேவைக்கேற்ப ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் என கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்கள். இப்போது ஆரம்பிக்க வேண்டுமென்றால் ஐஐஓஎல்-தான் பெஸ்ட். நிறைய டிமாண்ட் உள்ள படிப்பு. IIOL - Indian Institute of Organised Looting!

டுவிட்டர் நெசம்மாவே வேற உலகம்...

ட்ரெய்ன்ல போறது பாதுகாப்பானு ஒரு பொண்ணு கேட்டதும் எப்படி ஹெல்ப் பண்றாய்ங்க பாருங்க‌..!
@ranjanikovai - பொறந்ததுல இருந்து ஒருதடவ கூட Trainல போனதில்ல... இந்த தடவ தரிசனத்துக்கு Trainல போலாம்னு Idea... Train safeஆ..?
@lalvivek - சமயத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரா இரண்டு இரயில் வந்தாலும் வரும். பேசாமல் வீட்டிலேயே இருங்க. தூணிலும் துரும்பிலும் இருக்கிறார் நீங்க தரிசனம் செய்ய வேண்டியவர்.

@Nataraj07799679 - ஆந்திராவிற்கு தற்போது  train இருப்பதாக தெரியவில்லை. பேருந்துகள் இல்லை. தனியார் வாகனங்களில்தான் செல்ல வேண்டும். ஆந்திர மாநிலத்திற்கு தனியாக  epass  வாங்க வேண்டும்.@Da_galti2 - Train Safeலாம் இல்ல. டிரெயின் சில நேரம் தடம் புரண்டு எல்லாரும் செத்துடுவாங்க. பாலத்துல போகும் போது  அப்படியே கவுந்து ஆத்துல விழுந்துடும். டிரெயின்ல பாம்லாம் வைப்பாங்க. இரயில் வெடிச்சி சிதறிடும்...
@scbjagadish - ஆமா ‘ரிதம்’ படத்துல ஜோதிகா, ரமேஷ் அரவிந்த்  அநியாயமா செத்துப் போய்ட்டாங்க.

@marugupandi - பஸ் கூடதான் சேஃப் இல்ல... ‘எங்கேயும் எப்போதும்’ல ஜெய் பஸ்ல போனதாலதான் செத்துப் போனான்.
@Raj78131107 - நடந்து போறதும் சேஃப் இல்ல... நஸ்ரியா ‘ராஜா ராணி’ல ரோடு கிராஸ் பண்ணும்போது செத்துப் போயிடுவார்.
@Da_galti2 - வீட்ல இருக்குறதுகூட Safe இல்ல. ‘ரமணா’ல சிம்ரன் வீடு இடிஞ்சி விழும். அவங்க செத்துடுவாங்க...
@marugupandi - ஹெலிகாப்டர் கூட சேஃப் இல்ல...

‘ரட்சகன்’ படத்துல ரகுவரன் ஹெலிகாப்டர் மலைல மோதி வெடிச்சு சிதறினதாலதான் செத்துப் போவாரு.@srinivasraj83 - கப்பல்ல போறதும் safe இல்ல. ‘டைட்டானிக்’கே மூழ்கிருச்சு, தெரியும்ல!@Jananiharan1 - ஏன் இந்த கொலைவெறி?! இனி bus, train, auto எதுவும் safe இல்ல... Corona!!!!

@Vinayaga Murugan - கொரானாவுக்குப் பிறகு சென்னையின் முகம் மாறியுள்ளது. சென்னைக்குள்ளும், சென்னையைச் சுற்றியும் தொடர்ந்து பலர் தங்கள் வீடுகளை, நிலங்களை விற்க ஆரம்பித்துள்ளார்கள் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறேன்.

நாம் செய்யும் தவறு நமது சக்திக்கு மீறி கடன்வாங்குவது. நான் பார்த்தவரை இப்படி கடன் வாங்கி வீடு கட்டுபவர்களில் கணிசமானோர் ஒரு கோடிக்கும் மேலே வங்கியில் கடன் வாங்கியுள்ளார்கள். ஆலப்பாக்கத்தில் ஒருவர் வங்கியில் இரண்டு கோடி கடன்வாங்கியுள்ளார். அவசரத்தேவை என்று வீட்டை விற்கிறார். அதுபோல வளசரவாக்கத்தில் அண்மையில் வங்கியே ஒரு வீட்டை ஏலத்துக்கு விட்டது.

கடன்வாங்கி வீடு கட்டியவர்கள் எல்லாருக்கும் இந்த பிரச்னை இல்லை. கடன் வாங்கி பங்களா கட்டியவர்களும், கடன் வாங்கி பண்ணை வீடுகள், ரிஸார்ட்டுகள் வாங்கியவர்களும்தான் இப்போது பெரும் சிக்கலில் உள்ளார்கள். நான் வீடு வாங்கும்போது ‘இருபது வருட கடன் வாங்கிக்குங்க’ என்று வங்கி ஆட்கள் தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.  நான் ‘பத்து வருடங்களுக்கு மேலே கடன் வாங்க மாட்டேன். இஷ்டம் இருந்தா கொடுங்க’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.

‘சரி, நீங்க இரண்டு லட்சம் கொடுங்க போதும். மிச்ச பணத்தை கடனா தர்றோம்’ என்று சொன்னார்கள். என் கையில் பத்துலட்சம் இருந்தது. ‘அதை  வீட்டின் மதிப்பில் கழித்துக் கொண்டு  மிச்சப்பணத்தை கடனா கொடுங்க போதும்’ என்று சொன்னேன். அந்தக்கடனை அடைக்க பத்து வருடம் காத்திருக்கவில்லை. ஐந்தே வருடத்தில் கையில் அவ்வப்போது கிடைக்கும் உபரி பணத்தை எல்லாம் போட்டு அடைத்தேன்.

அந்த ஐந்து வருடங்கள் சரியான உறக்கம் இல்லை. சாப்பாடு இல்லை. கடன் காலில் குத்திய முள் போல உறுத்திக்கொண்டே இருக்கும்.
ஒருநாளைக்கு நூறுரூபாய் சம்பாதித்தாலும் கடன் இல்லாத வாழ்க்கைதான் பெரிய சந்தோசம்.

@Ramanujam Govindan - ஆண் குழந்தையை (மட்டும்) பெற்றவர்களுக்குத்தான் தெரியும் - ‘பெண் குழந்தையைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் தெரியும்’ மெசேஜ்கள் எவ்வளவு கடுப்படிக்கும் என.

@Yavanika Sriram - புத்திசாலி முட்டாள்களை விடவும் முட்டாள் புத்திசாலிகள் அசத்துகிறார்கள்.

@Devi Ka mal- #குனியாதே_எடப்பாடி என ஒரு ஹேஷ்டேக் ஓடிட்டு இருக்கு... ஹேஷ்டேக்னாலும் ஒரு நியாய தர்மம் வேணாமாடா...

@Saravanakarthikeyan Chinnadurai - விசுவாசம், பகுத்தறிவு இரண்டும் முற்றிலும் நேரெதிரான விஷயங்கள். ஒரே சமயத்தில் ஒருவர் இரண்டையும் கைக்கொள்ள முடியாது. அதனால்தான் தொண்டர்களுக்கும் அனுதாபிகளுக்கும் பரஸ்பரம் பிடிப்பதில்லை.

@Brindha Sarathy - தேடிவரும் வேருக்காக மண்ணில் ஒளிந்திருக்கும் சுனை.