காஜலுக்கு டும் டும் டும்



விரைவில், ஆன்லைனில் இண்டீரியர் பொருட்களை விற்பனை செய்து வரும் பிசினஸ்மேன் கௌதம் கிச்லுவை கைபிடிக்கிறார் காஜல் அகர்வால்!
ஆகஸ்ட் மாத லாக்டவுன் நேரத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடந்து முடிந்துவிட்டது!

திருமணம் இந்த மாதம் 30ம் தேதி மும்பையில் எளிமையாக நடைபெறப் போகிறது. தன் இன்ஸ்டா பக்கத்தில் காஜலே இதை அதிகாரபூர்வமாக ‘I Said Yes’ என கெத்தாக பொன் எழுத்தில் பொறித்திருக்கிறார். ரைட். யார் இந்த கெளதம் கிச்லு..? காஜலின் நெருங்கிய சர்க்கிளை விசாரித்தோம்.

‘‘காஜல் தைரியமான பொண்ணு. எதையும் மனசுல வச்சுக்காது. ‘உங்க கல்யாணம் எப்ப’னு மீடியாக்கள் கேட்டப்ப எல்லாம் ‘கண்டிப்பா உங்ககிட்ட சொல்லிட்டுத்தான் மணம் முடிப்பேன்’னு சொன்ன பொண்ணு. அதே மாதிரி இப்ப நடந்திருக்கு.

மும்பைல ஆண்டுதோறும் மராத்தான் போட்டி நடக்கும். கடந்த சில வருஷங்களா காஜலும் அதுல பங்கேற்கறாங்க. அதுக்குக் காரணம் கௌதம் கிச்லுதான்!  ஆக்சுவலி ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்.காஜலுக்கு டிராவலிங் ரொம்பப் பிடிக்கும். அதைபோல கௌதமும் ஒரு டிராவல் பறவை. பிசினஸ் விஷயமா பல நாடுகளுக்கு சுற்றுகிறவர். காஜலும் தன் ஃபேமிலியோட அடிக்கடி ஃபாரீன் டிரிப் அடிப்பாங்க. தன் வீட்டு இண்டீரியரை டெகரேட் பண்ண காஜலுக்கு ரொம்பப் பிடிக்கும்.

கெளதமோட நிறுவனத்துல இண்டீரியர் பொருட்களை வாங்க காஜல் போயிருந்தப்பதான் ரெண்டு பேரும் முதன் முதல்ல சந்திச்சாங்க.
கெளதம்தான் மராத்தானை காஜலுக்கு அறிமுகப்படுத்தினார். ரெண்டு பேரோட ரசனைகள் ஒண்ணு சேர... ரசாயன மாற்றம் ஏற்பட... காதல் மலர்ந்தது. கெளதமுக்கு ஒரு தங்கை உண்டு. அவங்களும் காஜல்தான் தனக்கு அண்ணியா வரணும்னு ஆசைப்பட்டாங்க. போதாதா..? ரெண்டு பேர் வீட்லயும் பேசி... இதோ இப்ப டும் டும் டும்...’’ கண்ணடிக்கிறார்கள் காஜலின் நட்புகள்.

ரைட். கல்யாணத்துக்குப் பிறகு காஜல் நடிப்பாரா..?

நடிப்பார்! இப்போது கன்னடம், இந்தியில் தலா ஒரு படம் நடித்து முடித்துவிட்டார். தமிழில் ‘பாரீஸ் பாரீஸ்’ ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ‘இந்தியன் 2’ ஷூட்டிங் ஜனவரியில்தான் மீண்டும் துவங்கும் என பேச்சு ஓடுகிறது. தெலுங்கில் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’வில் கமிட் ஆகியிருக்கிறார்.
எனவே, திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக காஜல் நடிப்பார்!வாழ்த்துகள் காஜல்... சந்தோஷமா இருங்க!

மை.பாரதிராஜா