டெலிவரி டாக்!கொலம்பியாவிலும் கொரோனா வைரஸ் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இன்னமும் அங்கே சமூக இடைவெளி கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அங்கே உள்ள ஒரு மினி மார்க்கெட்டின் டெலிவரி பாய் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வைரலாகி விட்டான்.
அந்த டெலிவரி பாய் மனிதன் அல்ல; ஏரோஸ் என்ற நாய்! வாடிக்கையாளரின் பெயரை வைத்தே சரியாக வீட்டைக் கண்டுபிடித்து பொருட்களை டெலிவரி செய்துவிடுகிறது ஏரோஸ்!

நடிகை கொடுத்த ஆர்டர்!

வித்தியாசமாக செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் பீகாரைச் சேர்ந்த ஓவியர் குமார் மிஸ்ரா. ஊரடங்கினால் வருமானம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் குமார்.

மாஸ்க் தயாரித்து அதன் மீது ஓவியம் வரைந்தால் நல்லா வியாபாரம் ஆகுமே என்று அவருக்குத் தோன்ற உடனே களத்தில் குதித்துவிட்டார். ஆரம்பத்தில் அவர் நினைத்தபடி நடக்கவில்லை. கடந்த வாரம் குமாரின் ஓவிய மாஸ்க்கை வாங்கிய ஒருவர் டுவிட்டரில் பதிவிட, தினமும் 300 மாஸ்க்குகளுக்குமேல் ஆர்டர் குவிகிறது!அதில் ஒரு ஆர்டர் இந்தி நடிகை ரவீணா தாண்டனுடையது!

த.சக்திவேல்