HOT HOTTER HOTTEST!இது அக்மார்க் கோங்குரா சட்னி

பெயருக்கேற்ற மாதிரிதான் மினுமினுக்கிறார் அப்சரா ராணி. ஒடிஸாவிலிருந்து டோலிவுட்டுக்கு டவுன்லோடு ஆகியிருக்கும் செம ஹாட் டால்ஃபின்.
சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘த்ரில்லர்’ தெலுங்குப் பட ஹீரோயின் இவர்தான். கொரோனா காலத்திலும் வனப்பும் மினுப்புமாக இளமை குலுங்கும் ஷூட் ஒன்றை சோஷியல் மீடியாவில் தெறிக்கவிட்டிருக்கிறார் அப்ஸ். அவ்ளோதான். ஒரே இரவில் 17 ஆயிரம் பேர் அவரை பின்தொடர்ந்துள்ளனர்!

அவரை அறிமுகப்படுத்தும் ஆர்ஜிவியே, அப்சராவுடன் டின்னர் சாப்பிட்டு மகிழும் மொமண்ட்டை செல்ஃபி எடுத்து ‘தேவதை அப்சராவுடன் ஒரு டின்னர்...’ என சிலாகிக்கும் அளவுக்கு அப்ஸ் ஹாட் பேபி!‘‘என் ரியல் நேம் அங்கிதா மஹரா. பூர்வீகம் ஒடிஸா. அப்பா ஏர்ஃபோர்ஸ்ல இருக்கார். சினிமா இண்டஸ்ட்ரீக்கு சம்பந்தமே இல்லாத ஃபேமிலி.

சின்ன வயசுல சினிமாவே பார்த்ததில்ல. ஏன்னா, ஒடிஸால இருக்கிற குக்கிராமத்துலதான் பிறந்தேன். அங்க சினிமா தியேட்டர்களே கிடையாது. படம் பார்க்கணும்னா 25 கிலோமீட்டர் நடந்து போகணும். நான் வளர்ந்தது டேராடூன்ல. பெல்காம்ல என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன். நான் படிப்பில் கில்லாடி கிடையாது. ஆனா, பாஸ் ஆகிடுவேன்.

காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல, டான்ஸ் - பாட்டுப் போட்டிகளுக்கு முதல் ஆளா பெயர் கொடுப்பேன். ஆனா, செலக்ட் ஆனதே கிடையாது. எல்லா இடத்திலும் என் திறமையைக் குறைச்சே மதிப்பிட்டாங்க. அதனால சினிமால நான் நடிப்பேன்னு நினைச்சுக் கூட பார்த்ததில்ல...’’ கொஞ்சுகிறார் அப்சரா ராணி.

அப்புறம் எப்படி நடிகையானீங்க..?
ஒருதடவை, நானும் என் அண்ணனும் மால்ல ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தோம். அப்ப ஓர் இயக்குநர் பக்கத்துல வந்து ‘சினிமால நடிக்கறீங்களா’னு கேட்டார். என்ன பதில் சொல்றதுனு தெரியாம விழிச்சேன். சமாளிச்சு ‘யோசிச்சு சொல்றேன்’னு சொல்லிட்டு அவர் போன் நம்பரை வாங்கி வீட்டுக்கு வந்துட்டேன்.

விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அப்பாவுக்கு ஷாக். அண்ணனோ, ‘உனக்கு மூணு வருஷங்கள் டைம் தர்றேன். அதுக்குள்ள சரியான கிராஃப் அமையலைனா, உன்னோட என்ஜினியரிங் படிப்புக்கு ஏற்ற வேலையைப் பார்க்கப் போயிடணும்’னு சொன்னார்.

எங்க அம்மாதான் ‘உன்னால முடியும்’னு தைரியம் கொடுத்து, என் கூடவே இருந்து சப்போர்ட் பண்ணினாங்க. ஆடிஷன் இல்லாமயே செலக்ட் ஆனேன். அந்தப் படம் ஒடிஸா, தெலுங்குனு ரெண்டு மொழிகள்லயும் ரெடியாச்சு. அப்புறம், ‘4 லெட்டர்ஸ்’, ‘ஊலலா ஊலலா’னு டோலிவுட்ல படங்கள் பண்ணினேன்.  

‘4 லெட்டர்ஸி’ன் ஃபங்ஷன்ல என் டான்ஸ் பர்ஃபாமன்ஸ் நடந்துச்சு. ஃபங்ஷனுக்கு சீஃப் கெஸ்ட்டா வந்திருந்தார் ராம்கோபால் வர்மா சார். ‘உங்க டான்ஸ் அசத்தல்’னு மேடைலயே பாராட்டினார். இந்தியாவே கொண்டாடற டைரக்டர் என்னைப் பாராட்டறார்னா சும்மாவா?! இப்ப அவரோட ‘த்ரில்லர்’ படத்துலயே நடிக்கறது என் லைஃப்ல நடந்திருக்கற மிகப்பெரிய விஷயம்!

அங்கிதா மஹரா என்கிற என் பெயரை அப்சரா ராணினு மாத்தினதும் சார்தான். ‘த்ரில்லர்’ ஃபர்ஸ்ட் லுக்தான் வெளியாகியிருக்கு... ஆனா, டோலிவுட் முழுக்க ரீச் ஆகிட்டேன்!ராம்கோபால் வர்மாவுக்கு Bad Boy இமேஜ் இருக்கே..?பொறாமைல அப்படி சொல்றாங்க! ‘த்ரில்லர்’ படத்தோட ஷூட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ‘டின்னர் சாப்பிட போலாமா’னு கேட்டார். என் அம்மாவோட போயிருந்தேன். ஜாலியும் கேலியுமா கலகலனு டின்னர் சாப்பிட்டோம்.

பேஸிக்கலி அவர் நைஸ் பர்சன். ஆனா, ஸ்வீட் பர்சன் இல்ல! ஸ்பாட்ல அவர் எதிர்பார்த்தா மாதிரி பர்ஃபார்ம் பண்ணலைனா ‘இது சரியில்ல... நல்லா இல்ல’னு முகத்துக்கு நேரா சொல்லிடுவார். அதேநேரத்துல பாராட்டவும் தயங்க மாட்டார். மேடை, சோஷியல் மீடியானு எல்லா ப்ளாட்ஃபார்ம்லயும் பாராட்டித் தள்ளிடுவார்.

‘ஒடிஸானாலே 1999ல ஏற்பட்ட புயல்தான் ஞாபகத்துக்கு வரும். அந்த இண்டஸ்ட்ரீலயும் திறமைசாலிகள் இருக்காங்கனு அப்சராவைப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்’னு அவர் டுவிட்டர்ல எழுதினது கூட அப்படித்தான்.தெலுங்கு இண்டஸ்ட்ரீ ரொம்ப பிடிச்சிருக்கு. நான் யார்... என்ன பண்ணியிருக்கேன்... எங்கிருந்து வந்திருக்கேன்... இப்படி எந்த நதிமூலத்தையும்  பார்க்காமல் திறமையை மட்டும் மதிக்கறாங்க. டேலன்ட்  இருந்தா கொண்டாடறாங்க. ஸோ, ஹைதராபாத்லயே செட்டில் ஆகிட்டேன்! l  

மை.பாரதிராஜா