12 வயதில் நாய்களுடன் கின்னஸ் சாதனை!
லத்தீன் அமெரிக்க நாடுகளில் புகழ்பெற்ற ஒரு நடனம் கொங்கா. சங்கிலித் தொடர் போல ஒருவர் பின் ஒருவர் நின்று ஆடும் நடனம் இது. இந்த நடனத்தில் ஒருவரின் முதுகில் கை வைத்துக்கொண்டு பின்னால் ஒருவர் நிற்பதை கொங்கா வரிசை என்கிறார்கள். மனிதர்களைப் போல் நாய்களாலும் கொங்கா வரிசையில் நிற்க முடியும் என்று சவால் விட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார் 12 வயதே ஆன அலெக்ஸா.
ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸா, நாய்களுக்குப் பயிற்சியளிப்பவர், தொலைக்காட்சி ஆளுமை என பன்முகங்களைக் கொண்ட சிறுமி. சமீபத்தில் 8 நாய்களை கொங்கா வரிசையில் நிற்கவைத்து அசத்தியிருக்கிறார். இவ்வளவு நாய்கள் கொங்கா வரிசையில் நிற்பது உலகில் இதுவே முதல் முறை. இந்த ஆச்சர்ய சம்பவம் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டது.
த.சக்திவேல்
|