கிரிக்கெட் வீரரோட டீ குடிச்சிருக்கேன்... ஆனா, dating போனதில்ல!



கிறங்கடிக்கற கண்ணு... அசரடிக்கற ஜின்னு என கவிதை எழுதலாம் போலிருக்கிறார் நிதி அகர்வால். டோலிவுட்டின் செம செக்ஸி ஹீரோயின். அங்கே நாக சைதன்யா, அகில் என நாகார்ஜுனாவின் செல்லங்களுடன் ஜோடி போட்ட மாடர்ன் மயில். இப்போது ஜெயம் ரவியின் ‘பூமி’க்காக கோலிவுட் வந்திருக்கிறார்.நிதியோட ஹிஸ்ட்ரி..?

பிறந்தது ஹைதராபாத்ல. ஆனா, வளர்ந்தது, படிச்சது எல்லாமே பெங்களூருல. பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சிருக்கேன். எங்க ஃபேமிலியில யாருமே இந்த இண்டஸ்ட்ரீல இல்ல. அப்படியிருந்தும் எனக்கு ஆக்ட்டிங்ல எப்படியோ விருப்பம் வந்துடுச்சு. சின்ன வயசுல இருந்தே சினிமா பிடிக்கும். டிவி அவ்ளோ பார்ப்பேன்.

காலைல எழுந்ததும் டிவியை ஆன் பண்ணினா, ஸ்கூல் போற வரை பார்த்திட்டிருப்பேன். அப்புறம், ஸ்கூல் விட்டு வந்ததும் மறுபடியும் டிவி.
ஒரு நடிகையாகணும்னு நினைச்சேன். அதை நோக்கியே என்னை தகுதியாக்கிக்கிட்டேன். காலேஜ் படிக்கும் போது பாலே, கதக், பெல்லினு டான்ஸ் கத்துகிட்டு ப்ராப்பர் டான்ஸரானேன்.

அந்த டைம்ல மாடலிங் ஆஃபர்ஸ் வந்தது. பெங்களூருல மாடலிங் செஞ்சு பெயர் வாங்கினேன். எதிர்பார்த்தா மாதிரியே கன்னடா, தெலுங்குல இருந்து மூவி ஆஃபர்ஸ் வந்துச்சு. ஆனா, எதிர்பாராதது பாலிவுட் ஆஃபர். யெஸ். ஒரு ரெண்டு வருஷங்கள் மும்பைல இருந்தோம். அப்பதான் ‘முன்னா மிக்கேல்’ படத்தோட ஆடிஷன்ல பங்கேற்கும் சான்ஸ் கிடைச்சது. லக்கிலி செலக்ட் ஆனேன். ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் ஷெராப்தான் ஹீரோ. அப்புறம் டோலிவுட். இப்ப உங்க ஊர்!

உங்களப் பத்தி ரெண்டு சீக்ரெட் சொல்லுங்க..?

ரெண்டா? எக்ஸ்ட்ராவே சொல்றேன். சின்ன வயசுல நான் லெஃப்ட் ஹேண்ட்ல எழுதுவேன். வீட்ல ‘லெஃப்ட் ஹேண்ட் பயன்படுத்தக் கூடாது’னு சொல்லிச் சொல்லி  என்னை ரைட் ஹேண்ட் ஆக்கினாங்க. அப்புறம், ஒரே ஜோடி சாக்ஸ் பயன்படுத்துறது பிடிக்காது. ஒவ்வொரு கால்லயும் ஒவ்வொரு கலர் சாக்ஸ் போட்டுக்க பிடிக்கும். பியானோ வாசிக்கத் தெரியும். பாத்ரூம் பாடகி. இஷ்டப்பட்ட பாடல்களை எல்லாம் பாத்ரூம்ல பாடிட்டிருப்பேன். இட்லி ரொம்ப பிடிக்கும். என்னோட எல்லா பேட்டிகள்லயும் தவறாம இட்லி இடம்பெறும். இந்த பேட்டி உட்பட!

இன்ஸ்டால பிசியா இருக்கீங்களே..?

தப்பா..? இன்ஸ்டால மட்டும்தான் கொஞ்சம் ஆக்ட்டிவ். மத்தபடி சோஷியல் மீடியால டான்ஸ், மூவி புரொமோ போஸ்ட்களை மட்டும் பதிவிடுவேன். அவ்ளோதான். இன்ஸ்டால ப்ரியங்கா சோப்ரா, ஜாக்குலின் பக்கங்களை ஃபாலோ பண்றேன். ஏன்னா, ப்ரியங்கா பேஜ்ல நம்ம ஊர்ல இருந்து ஃபாரீன் ஃபேஷன் வரை அப்டேட் இருக்கும்.

பாலிவுட் சஞ்சய் லீலா பன்சாலி, கோலிவுட் எஸ்.எஸ்.ராஜமௌலி... யாரைப் பிடிக்கும்?

பார்றா! ரெண்டு பேருமே என் ட்ரீம் டைரக்டர்ஸ். ரெண்டு பேரின் படங்களும் பண்ற ஆசைதான். ஆனா, யாரை பிடிக்கும்னா... இப்ப டோலிவுட்ல படங்கள் பண்றதால, ராஜமௌலி!

ரொமாண்டிக்கா டேட்டிங் போனதுண்டா?

என்னது... என்னது... ரொமாண்டிக் டேட்டிங்கா..? கேட்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, டேட்டிங் எல்லாம் போனதே இல்ல. அதுவும் ரொமாண்டிக்கா..? இனிமேதான் போகணும்!ஆனா, கிரிக்கெட் வீரர் ஒருத்தரோட டேட்டிங் போனதா பாலிவுட் மீடியாக்கள்ல நியூஸ் வந்திருக்கே..?
அதை நானும் படிச்சேன்! ஆக்சுவலி நான் Dating kid கிடையாது. கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை எனக்குத் தெரியும். அவர் மங்களூர்காரர். நான் பெங்களூர்வாசி. ஒரு முறை அவரை நேர்ல சந்திச்சும் பேசியிருக்கேன்.

மும்பைல இருந்தப்ப என் மூவி ஸ்கிரீன்ல சந்திச்சிருக்கேன். நாங்க டீ சாப்பிட்டிருக்கோம். டீதான். டின்னர் இல்ல. இன்னும் சொல்லப் போனா, எல்லாரையுமே நான் ‘ப்ரோ’, ‘டியூட்’னுதான் கூப்பிடுவேன். அந்த வகைல ராகுலும் என் ப்ரோதான்! மத்தபடி டேட்டிங் எல்லாம் போனதில்ல பாஸ்! நம்புங்க!

மை.பாரதிராஜா