விக்கிப்பீடியா சேவை இந்தியாவில் நிறுத்தம்?



இந்தியாவின் புதிய தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், விக்கிப்பீடியா இந்தியாவில் இயங்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் இருந்தால், அந்நிறுவனத்திற்கு இந்தியாவில்  நிரந்தர கட்டடமும், முகவரியும் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.இதனால் இந்தியாவில் நிரந்தர முகவரியில்லாமல். வெளிநாடுகளிலிருந்து இயங்கும் விக்கிப்பீடியா போன்ற பல நிறுவனங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் உட்பட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் விக்கிப் பீடியா தளம் தொடர்ந்து இயங்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.அரசும் இதை உணர்ந்து விக்கிப்பீடியாவை அனுமதிக்க வேண்டும்!

ஸ்வேதா கண்ணன்