கான்கார்ட் விமானம்!



எருதுகள் விரட்டு விழாவில் வீர சாகசம் புரிந்துள்ள சீனிவாச கவுடாவை விருதுகள் விரட்டத் தொடங்கிவிட்டன.
- இலக்சித், மடிப்பாக்கம்; பிரேமா குரு, சென்னை; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

டாஸ்மாக் மாநிலமாக புகழ்பெற்று தமிழகம் தள்ளாடிக்கொண்டு வருவதை சாராயம் போல கசப்பான தகவல்களுடன் விவரித்த கட்டுரை கவலையை அளித்துவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; மியாவ்சின், கே.கே.நகர்; அ.யாழினி பர்வதம், சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘டேட்டா கார்னரி’ல் இடம்பெற்ற 10 மாறுபட்ட தகவல்களும் மாறுபட்ட ரசனையைத் தந்தன. கொயட் இன்ஃபர்மேட்டிவ்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; கீதா, கோவில்பட்டி; மனோகரன், கோவை.

‘மாஸ்டரி’ல் தளபதி வாய்ஸில் குட்டிக்கதை கேட்ட கணமே, அதன் சீக்ரட் சுவாரஸ்யங்களைத் தொகுத்துத் தந்த உங்கள் வேகம், ‘கான்கார்ட்’ விமானத்தை விட அமோகம்.
- அ.யாழினி பர்வதம், சென்னை; சந்திரமதி, சென்னை; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை; கதிரவன், மதுரை; ஜெர்லின், ஆலந்தூர்; கவுரிநாத், பரங்கிமலை.

தில்லி சட்டசபையில் எட்டு இருக்கைகளை மட்டுமே பாஜகவுக்கு விட்டுக்கொடுத்துள்ள ஆம் ஆத்மியின் வெற்றி அசுரத்தனம்.
-வேலு, உள்ளகரம்; பழனிகுமார், அசோக் நகர்; சக்கு ராம்கி, மடிப்பாக்கம்; ஆசிகா, வியாசர்பாடி.

தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், ஊழல்களால் 90 சதவீத ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கை சூன்யமாகிவிட்டது என்ற செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதில் ஈடுபட்ட ஊழல்வாதிகளை மிகக் கடுமையாகக் கண்டித்து அரசுத் தேர்வின் மீது மீண்டும் நம்பிக்கையை உறுதிப் படுத்துவது தமிழக அரசின் தலையாய கடமை.
- மனோகர், மேட்டுப்பாளையம்; கலிவரதன், கீழ்க்கட்டளை; செம்மொழி, சேலையூர்; பிரேமா பாபு, சென்னை.

மரணத்தின் கூடையில் விழுந்து எமனுக்கு பாயின்ட் பெற்றுத் தந்துள்ளார் கூடைப்பந்து ஜாம்பவானான கோப். அந்த பாஸ்கட் பாலுக்கே ஒரு காதல் கடிதம் எழுதி ஆஸ்கர் வென்றுள்ளது அபாரம்.
-கணேசன், திருமருகல்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; ராஜம் தம்பையா, மாம்பலம்; கருணாகரன், போரூர்.

தமிழக மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்த அதிமுக அரசின் அலட்சியம்தான் முக்கிய காரணம் என கல்வியாளர் மாடசாமி கூறியிருப்பது நிதர்சனமான உண்மை. வளர்ந்த நாடுகளில் இருக்கும் கல்விமுறைக்கு நாம் மாறவேண்டும் என்ற கருத்தைப் பரிசீலிக்க வேண்டும்.
- க.நஞ்சையன், பொள்ளாச்சி; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; பப்பு, அசோக் நகர்.

ரீடர்ஸ் வாய்ஸ்