மரணத்தை தள்ளிப் போடலாம்!‘‘இனி மரணம் எப்போது வரும் என்பதை கண்டுபிடித்துச் சொல்ல முடியும்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதாவது ஒருவர் இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கப்போகிறார் என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும் தோராயமாக கணிப்பதற்கான இரத்தப் பரிசோதனை முறை வரப்போகிறது.
அதன்படி ஒருவரின் ரத்தத்தை ஆய்வு செய்து இன்னும் பத்து ஆண்டுகள் தான் அவர் உயிரோடிருப்பார் என்று அந்த ஆய்வில் சொல்ல முடியும்.

ஜோரிஸ் டீலன் மற்றும் எலைன் என்ற இரு மருத்துவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு கட்டுரையைச் சமர்ப்பித்திருக்கின்றனர். இதற்காக 18 முதல் 109 வயது வரையிலான 33 ஆயிரம் பேரை ஆய்வு செய்திருக்கின்றனர்.

ஆய்வுக்குட்பட்டவர்கள் எல்லோருமே நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருந்தவர்கள். அவர்களின் 16 வருட கால உடல் நல விவரங்களை ஆய்வு செய்து அவர்கள் எப்போது மரணிக்கப்போகிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கின்றனர். இந்தப் பரிசோதனை மட்டும் நடைமுறைக்கு வந்தால் மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அள்ளும்.

த.சக்திவேல்