ஹிப் குயின்!



தன்னுடைய வனப்பான மடிப்பு ‘ஹிப்’ மூலமாக ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனின் இனிய பேட்டி படிக்க ரம்மியமாக இருந்தது. அவருக்கு ‘ஹிப் குயின்’ என்ற பட்டத்தைத் தாராளமாக வழங்கலாம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; இலக்சித், மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை; ஜெர்லின், ஆலந்தூர்; கவுரிநாத், பரங்கிமலை; ஆசிகா, வியாசர்பாடி; சரண் சுதாகர், வேளச்சேரி; கருணாகரன், போரூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனிலின் புகழ் இனி வானில்.
- சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; ஜெர்லின், ஆலந்தூர்; மனோகர், மேட்டுப்பாளையம்; கீதா, கோவில்பட்டி; நரசிம்மராஜ், மதுரை; ரவி, சென்னை; கே.ஆர்.உதயகுமார், சென்னை.

மழை ரமணன் தன் மனதில் பட்டதை எல்லாம் கொட்டோ கொட்டென கொட்டி உள்ளத்தில் தனி இடமே பிடித்துவிட்டார்.
- சிம்மவாஹினி, வியாசர் நகர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ரவி, சென்னை; என்.அத்விக், அசோக் நகர்; அன்புமுத்து,
வடுவூர்; க.நஞ்சையன், பொள்ளாச்சி.

அமேசான் காட்டில் கொழுந்துவிட்டெரிகிற தீ பற்றிய கட்டுரை, அமேஸிங்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; ப.மூர்த்தி, பெங்களூரு; இலக்சித், மடிப்பாக்கம்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; ரா.ராஜதுரை, சீர்காழி.

தமிழ் திரை ரசிகர்களை புதுமை விரும்பிகளாக உருவகப்படுத்தி மகிழ்கிற ‘நல்லதா கெட்டதா’ சினி கட்டுரை சிம்ப்ளி சூப்பர்ப்.
- சரண் சுதாகர், வேளச்சேரி, பப்பு, அசோக் நகர்; செம்மொழி, சேலையூர்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; வெ.லட்சுமி
நாராயணன், வடலூர்; டி.முருகேசன், கங்களாஞ்சேரி.

இந்த வாரம் ‘நம்மால் முடியும்’ உலுக்கிவிட்டது. ஜோதி இல்லாத ஜோதியின் தன்னம்பிக்கை அசத்தல்.
- ரா. புனிதவதி, பொள்ளாச்சி; சிம்மவாஹினி, வியாசர் நகர்; சி.மகேஷ், சென்னை; ரவிக்குமார், பொள்ளாச்சி; இந்துமதி, பெங்களூரு.

பெண்கள் ஆட்டோ ஓட்டுவதே ஆபூர்வம். பெண்களுக்கும் ஏழைகளுக்கும் கை கொடுக்கிற ஆட்டோ அக்கா (பி.வி.ராஜீ)வாக பவனி வருவது அபாரம். ஆட்டோ ஓட்டி பிறருக்கு உதவுகிற அவரது ‘மோட்டோ (கொள்கை)’ க்குப் பாராட்டுகள்.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; ரா.புனிதவதி, பொள்ளாச்சி; மகேஸ்வரி, பொள்ளாச்சி.