கே.வி.ஆனந்த் ப்ளே ஸ்டோர்
 பொக்கிஷமாக பாதுகாப்பது: பத்திரிகை புகைப்படக்காரராக இருக்கும்போது எடுத்த போட்டோக்கள் + ‘கல்கி’யில் முதன்முதலில் வெளியான அட்டைப்படம் + கொள்ளுத்தாத்தா, பாட்டி விட்டுச்சென்ற கலைநயமிக்க பொருட்கள். ரசனை: ருசியான உணவுஎங்கிருந்தாலும் தேடிப் போய் உண்பார்.
கையிலிருப்பது: ஐபோன் 10.
தமிழில் பிடித்த படங்களில் டாப்-5: ‘உதிரிப்பூக்கள்’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘மவுனராகம்’, ‘அருவி,’ ‘அவள் அப்படித்தான்’.
சமீபத்திய சாதனையாக நினைப்பது: சினிமாவிற்கு வந்து 25 வருடங்கள் ஆனதை!
முதன்முதலில் வாங்கிய கார்: மாருதி 800.
சூர்யா: கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு மிக்கவர்.
கடைப்பிடிக்கும் ஒரு பாலிஸி:‘வெற்றியை கொண்டாடியதில்லை. தோல்வியில் துவண்டதில்லை!’
முதன்முதலில் ஆட்டோகிராப் வாங்கியது: ‘கல்லுக்குள் ஈரம்’ நாவலை எழுதிய ர.சு.நல்லபெருமாளிடம்!
மொபைல் பிக்சர் quotes: When a pot full of water can be emptied by a small hole, similarly little ANGER or EGO can drain all the nobility of a good heart.
நல்ல பழக்கம் : ‘பிடிச்சதை செய்’
பயணத்திற்கு: ஆடி க்யூ7.
அடிக்கடி சொல்லும் வார்த்தை: ‘சொதப்பிடாதே...’
பிடித்த லொகேஷன்: கடலும், கடல்சார்ந்த இடங்களும்!
வீட்டிலிருந்தால்...: தோட்டக்கலை வல்லுநர். ஹோம் கார்டனிங்.
மை.பா
|