சிரிங்க பாஸ்



‘‘என்ன... நம்ம தலைவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரா..?’’
‘‘ஆமா... ஒரு காலத்துல அவர் குடும்பத்தைச் சேர்ந்தவங்க கஞ்சா பயிரிட்டாங்க!’’

“என் மனைவி வீட்ல தனியா இருந்தப்ப ஒருத்தன் வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டான்…”
“பாவம்... அவனுக்கு என்ன கெட்ட நேரமோ?”

‘‘நீ ஏதாவது சொல்ல விரும்பறியா, கபாலி?’’
‘‘கோர்ட் வளாகத்துலயும் வைஃபை வசதி வேணும்
எசமான்!’’

“தினமும் பூ வாங்கிட்டு வாங்கன்னு உன் கணவரை நச்சரிச்சது தப்பா போயிடுச்சா?”
“ஆமா... பூக்காரிக்கும், என் கணவருக்கும் கனெக்‌ஷன் உண்டாயிடுச்சு!”

‘‘தலைவருக்கு பெரிய மனுசுயா... ‘நானும் சாதாரண தொண்டன்தான்’னு சொல்றாரே...’’
‘‘அப்படி சொல்லி சொல்லிதான் ஒவ்வொரு மீட்டிங் முடிஞ்சதும் ‘தொண்டன்’ பங்குக்கான குவார்ட்டரும் பிரியாணியும் வாங்கிக்கறாரு!’’

“இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்ற தலைவர் மிக நீண்ட நேரமாக காத்திருப்பதால், தொண்டர்கள் எங்கிருந்தாலும் தயவு செய்து மேடை முன் வந்து அமரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!”

“திருடப்போற இடத்துல ஏன்பா பணத்தை விட்டுட்டு நகையை மட்டும் எடுக்கற..?’’
“பணம் எப்ப வேணாலும் செல்லாம போகலாம் இல்லையா?!”

எஸ்.எஸ்.பூங்கதிர்