short&sweet-Star kidsக்கு சினிமா என்ட்ரி ஈசியா? ஸ்ருதிஹாசன்
ஆக்சுவலா நடிகையா ஆகணும்னு ப்ளான் பண்ணாமதான் இந்த ஃபீல்டுக்கே வந்தேன். அப்பா கூட ‘you should act’னு சொல்வார். அவர்கிட்ட கெத்தா ‘நான் டைரக்ஷன் பண்ணப் போறேன்’னு சொன்னதும் உண்டு!  அப்ப என் மைண்ட்ல மியூசிக், பாட்டு எழுதுறது, ரைட்டிங்னு வேற வேற ஆசைகள் இருந்துச்சு. அமெரிக்காவில் இருந்து வந்ததும் பாலிவுட்ல அழைப்பு. என் ஃப்ரெண்ட் இம்ரான்கான் கூப்பிட்டு, ‘ஒரு ஆக்ஷன் படம் இருக்கு. நீ நடிக்கறீயா’னு கேட்டார். அப்படித்தான் இந்தியில் ‘லக்’ படம் அமைஞ்சது. இப்ப நடிப்பே passion ஆகிடுச்சு!
|