சிரிக்க... சிந்திக்க!



ரீடர்ஸ் வாய்ஸ்

‘கூகுள்’ நிறுவனத்தின் புதிய புராஜெக்ட்டைச் செய்ய மாட்டோம் என ஊழியர்கள் அனைவரும் மறுத்தது பற்றிய தகவல்கள் ஒரு ஹாலிவுட் படத்தின் கதை போல் திகைப்பில் ஆழ்த்திவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; கதிரவன், மதுரை; இலக்சித், மடிப்பாக்கம்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; மனோகரன், பொள்ளாச்சி; கருணாகரன், போரூர்; க.நஞ்சையன், பொள்ளாச்சி.

ஆட்டோ ஓட்டினாலும் தினமும் ஆதரவற்ற முதியவர்களுக்குப் பசிப்பிணி ஆற்றும் முருகனின் சேவை மகத்தானது.
- என்.சண்முகம், திருவண்ணாமலை; ரவிக்குமார், பொள்ளாச்சி; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; எம்.ராஜ், திண்டுக்கல்; மனோகர், கோவை; இப்ராகி, சென்னை; ரா.புனிதவதி, பொள்ளாச்சி; மல்லிகா, சென்னை.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்பதை நெறியாகக் கொண்டு, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கண்ணைத் திறக்கும் லோகநாதன் - சசிகலா தம்பதியரின் சேவைக்கு எங்கள் ராயல் சல்யூட்.
- சாய்கவின், பொள்ளாச்சி; சந்திரசேகர், திருப்பூர்; மனோகர், மேட்டுப்பாளையம்; பிரேமா, சென்னை; அமிர் பத்ரா, சென்னை; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கதிரவன், மதுரை.

‘சிரிங்க பாஸ்’ ஜோக் அனைத்தும் சிரிக்க மட்டுமல்ல; சிந்திக்கவும் வைக்கின்றன.
- கோ. தியாகராஜன், கீழ்வேளூர்; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; செம்மொழி, சேலையூர்; ப.மூர்த்தி, பெங்களூரு.

தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்விற்குப் பயன்படுத்த மத்திய அரசால் அளிக்கப்பட்ட ரூ.3677 கோடியை திருப்பி அனுப்பிய தமிழக அரசை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
- மனோகர், மேட்டுப்பாளையம்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; மியாவ்சின், கே.கே.நகர்; ஜெரிக், சென்னை.

எஸ்.ஏ.சந்திரசேகரின் மனம் திறந்த பேட்டி மிகவும் சிந்திக்க வைத்தது. பேட்டியின் இறுதியில் அவர் சொன்ன அந்த நிலைமையை ‘வரும் ஆனா வராது’ என்று வடிவேலுவின் காமெடியில் சொல்லலாம்.
- க. நஞ்சையன், பொள்ளாச்சி; த.சத்தியநாராயணன், அயன்புரம்; மகேஸ்வரி, சென்னை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; சரண் சுதாகர், வேளச்சேரி.

திரையுலகில் பெண் கதாபாத்திரங்களுக்கு கவுரவத்தன்மை ஏற்பட்டு வருகிறது என்கிற சூழலை விறுவிறுப்பாக உணர்த்தியது ‘லூசுப் பொண்ணுக்கு விடை கொடுத்தாச்சா?’ கட்டுரை.
- கருணாகரன், போரூர்; கணேசன், மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்.