சிரிங்க பாஸ்



“உன் புருஷன் ஏன் உன் பெயரை எப்பவும் மூணு முறை சொல்றாரு..?’’
“அவர் கோர்ட்டுல டவாலியா இருக்கார்ல... அதான்!’’

“அந்த முரட்டு ஆசாமி ஏன் அந்தப் பையனை உதைக்கறாரு?”
“தண்ணி போட்டதும் கிக் வருதான்னு டெஸ்ட் பண்றாராம்!”

“மன்னர் எதுக்காக நூறு பாட்டில்கள் வாங்கி வரச் சொன்னார்?
‘‘பாட்டில் கேப் சேலஞ்ச் விளையாடிப் பழகவாம்!”

“தலைவர் கைல பழத்தை வைச்சுக்கிட்டுப் பேசறாரே?”
“பழமொழி சொல்றாராம்!”

“மகனுக்குப் பிடிச்ச பெண்ணை ஏன் அம்மாவுக்கு பிடிக்கலை?”
“அவ துப்பாக்கி சுடும் போட்டியில பரிசு வாங்கியிருக்காளாம்!”

“இங்கிலீஷ் டீச்சரைக் காதலிச்சது தப்பாப் போச்சா... ஏன்?”
“லவ்லெட்டரை தப்பா எழுதினா 100 முறை இம்போசிஷன் எழுதச் சொல்றா!”

“நேத்திக்கு லீவு லெட்டர்னு நினைச்சு லவ் லெட்டரை டீச்சர்கிட்ட கொடுத்துட்டேன்...’’
“ஐயய்யோ... அப்புறம்?”
“திருத்தி, நூத்துக்கு நாற்பது மார்க் போட்டுக் குடுத்துட்டாங்க!”

“சைக்கிள்ல வர்றப்ப ஏன் ஹெல்மெட் போடற?”
“டூ வீலர்ல போறவங்க ஹெல்மெட் போடணுமாமே?”

“அந்தப் பெரியவர் ஏன் பத்திரத்துல கைநாட்டு வைக்கிறார்?”
“அவர் நாட்டு வைத்தியராம்!”

வேமாஜி