வாட்ஸ் அப்புக்கு தடையா..?



ம்க்கும். வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுக்க பல கோடிப் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.  வாட்ஸ்அப் app இல்லாத ஃபோனே இல்லை என்று கூறும் அளவுக்கு ஆண்ட்ராய்ட்  மற்றும் விண்டோஸ் ஃபோன்களின் உடல் உறுப்பு போல இந்த app வளர்ந்துள்ளது.
மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப்பை சில  ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதனைத் தொடர்ந்து வாட்ஸ்  அப்பில் பல புதிய அப்டேட்களைக் கொண்டு வந்த வண்ணம் உள்ளது.

அப்படியிருக்க, தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் என்ன முட்டாளா..?எனில் கடந்த சில நாட்களாக தீயாகப் பரவும் ‘வாட்ஸ் அப் தடை’ செய்திக்கு என்ன அர்த்தம்..? இருக்கு, ஆனால் இல்லை என்பதுதான்!விண்டோஸ் போன்களில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குப் பிறகு வாட்ஸ் அப் வராது என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது என்னவோ உண்மைதான்.

வீடியோ கால், குரூப் வீடியோ கால் என பல வசதிகளை மேம்படுத்திய வாட்ஸ் அப், நாட்டின் நலன் கருதி சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதே நேரம் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் அப்டேட் செய்தும் வருகிறது.

இதனால் சில பழைய செயல்திறன் போன்களில் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்ஸ் வராது என்று ஃபேஸ்புக் நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரைதான் பழைய விண்டோஸ் போன்களில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த முடியும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரும் வாட்ஸ்அப் அப்டேட், விண்டோஸ் போன்களில் இடம் பெறாது! அப்டேட்ஸ் மட்டுமின்றி விண்டோஸ் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்படுவதாகத்தான் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம் அதனை சரி செய்ய யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்பார்ம் என்ற செயலியை (app) வாட்ஸ் அப் உருவாக்கி வருகிறது. இதன்மூலம் புது மாடல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ் அப்பை எப்போதும்போல் பயன்படுத்த முடியும்.எனவே, வதந்திகளை நம்பாதீர்கள்! வாட்ஸ் அப்புக்கு எந்தத் தடையும் இல்லை. வழக்கம்போல் கடலை போட்டு பலான வீடியோக்களைப் பார்க்கலாம்!
டோன்ட் ஒரி... பீ ஹேப்பி!  

காம்ஸ் பாப்பா