கர்ப்பமாக இருந்தபோதும் படுக்கைக்கு அழைத்தார்கள்!‘‘சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு வெளியேறி விட்டேன். எதற்காக நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன் என்று தெரிந்துகொள்ள ஒருவர் கூட ஆர்வம் காட்டவில்லை. இதனால் திரையுலகமே இப்படித்தான் என்று முடிவு செய்து கொண்டேன்.சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் ஒருபோதும் இருந்ததில்லை. என்னை பல தடவை நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலர் படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள்! நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தும் படுக்கைக்கு அழைத்தனர்.

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன. இந்த நிலைமை மாற வேண்டும். ஆனால், அது மெதுவாகத்தான் நடக்கும்...’’- இப்படி சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார் சமீரா ரெட்டி. ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’ உட்பட பல தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்திருக்கும் சமீரா ரெட்டி, அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 4 வயது குழந்தைக்குத் தாயான இவர், இப்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார்!  
                                         
காம்ஸ் பாப்பா