சபாஷ்!



‘பிரேக் ஆன ஸ்ருதியின் காதல்!’ - ‘‘நாட்டுக்கு மிக முக்கியமான செய்தியா..?’’ என்று வாசகர்களாகிய நாங்கள் கேட்க வேண்டியதை நீங்களே கூறிவிட்டீர்கள். பிடியுங்கள் ஒரு ‘சபாஷ்’.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; இலக்சித், மடிப்பாக்கம்; அ.யாழினி பர்வதம், சென்னை; மனோகர், சென்னை; ஆர்.ஜெ.சி, சென்னை; குமரகுருபரன், மயிலாடுதுறை; மூர்த்தி, சென்னை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

‘அரசியலுக்கு வருகிறார் சூர்யா!’ என்ற தலைப்பைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டோம். படித்தால் ‘என்.ஜி.கே’ அரசியல் கலந்த படம் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தோம்.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மயிலை.கோபி, திருவாரூர்; பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

யார் இந்த ஐஎஸ்ஐஎஸ் - என்ற திகிலான கேள்விக்குத் திகைப்பூட்டும் விடையாக விளங்கிய கட்டுரையைப் படித்து முடித்ததும் அந்தப் பாட்டி போல திட்டத் தோன்றியது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; மாணிக்க வாசகம், கும்பகோணம்; இலக்சித், மடிப்பாக்கம்; மனோகர், மேட்டுப்பாளையம்.

ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதி பற்றிய ரன்னிங் ஸ்டோரி மனதைத் தொட்டது.
- மாணிக்கவாசகம், கும்பகோணம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; ரவிக்குமார், பொள்ளாச்சி, ஆர்.ஜெ.சி, சென்னை; கருணாகரன், போரூர்.

பாலாஜி சக்திவேலை வெற்றிமாறன் நடிக்க வைத்தது பாவம் அல்ல; அது பெருமிதம் கொள்ள வைக்கும் நல்ல காரியம்.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

முன்னோர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி பாலைவனமாகிய ராஜஸ்தானை நீர்த்தேக்கங்கள் நிறைந்த விவசாய நிலமாக மாற்றிய ‘தண்ணீர்த் தாய்’ ஆம்லா ரூயா பற்றிய கட்டுரை எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
- மகேஸ்வரி, பொள்ளாச்சி; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; மாணிக்க வாசகம், கும்பகோணம்; கைவல்லியம், மானகிரி; அ.யாழினி பர்வதம், சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்.

‘தெருவுக்கு வந்த சந்திரபாபு’ செய்தி மனதை நெகிழ வைத்தது.
- கோவிந்தராஜன், திருச்சி; மாணிக்கவாசகம், கும்பகோணம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; கைவல்லியம், மானகிரி.

வெள்ளிவிழா கண்ட இயக்குநர் ஷங்கருக்கு நடந்த விழா அவருடைய படங்களைப் போல ‘பிரமாண்டம்’.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; டி.எஸ். தேவா, கதிர்வேடு; சங்கீதசரவணன், மயிலாடுதுறை.

ஏழு வயது இந்தியச் சிறுமி 3 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஐநா சபையில் பேசியது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெருமை.
- தா.சைமன் தேவா, விநாயகபுரம்; ப.மூர்த்தி, பெங்களூரு; அன்பழகன், சென்னை; கருணாகரன், போரூர்.
 
ரீடர்ஸ் வாய்ஸ்