அஞ்சு பன்ச்-ஜெயம் ரவி*உடற்பயிற்சிக்கு நோ லீவ். இரவு விழிப்பு, லேட் நைட் கலாட்டாக்கள் என எதுவும் இல்லை. நேரடியாக வீட்டிற்கு ஆஜர் ஆகிவிடுவார்.

*தொடர்பு எண்ணை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார். ஃபேன்ஸி நம்பரை விரும்புவதில்லை. வாட்ஸ் அப்பிலும் இல்லை.

*விஷால், ஜீவா, ஆர்யா என நெருங்கிய நட்புவட்டம் இருக்கிறது. இவர்கள் சேர்ந்து விட்டால் அந்த இடம் அமளி
துமளிதான்.

*மனைவி, குழந்தையோடு தனி வீட்டில் இருந்தாலும் எப்போதும் அம்மா பிள்ளை. நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் தாயைப் பார்க்க வந்துவிடுவார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் மகன் ஆரவ்வின் விளையாட்டு பொம்மையாகிவிடுவார்.

*மும்பைக்குப் போனால் கண்டிப்பாக நதியா வீட்டுக்கு விசிட் அடிப்பார். அவரிடம் தாயன்போடு பாசம் காட்டுவார்.

நன்மதி