இவர்கள்தான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்!ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம். இந்திய கிரிக்கெட் வீரர்களை மைதானத்தில் மட்டுமல்ல... அவர்களது லைஃப் ஸ்டைல் வாழ்க்கையையும் நாம் ரசிக்கிறோம்.  இந்தப் புள்ளியில் ஃபுல்ஸ்டாப் வைத்துவிட்டு மேட்டருக்கு நகரலாம். பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களின் மனைவிகள் கல்யாணத்துக்கு முன் எங்கு என்ன வேலை செய்து கொண்டிருந்தார்கள்..? பொழுது போகாமல் இணையத்தில் மேய்ந்து திரட்டிய தகவல்கள் இதோ..!

* சாக்ஷி (Sakshi): ஹோட்டல் மானேஜ்மெண்ட்டில் பட்டப்படிப்பை முடித்த இவர், நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்தவர். தோனியின் பெட்டர் ஆஃப்.

* சீதல் கௌதம் (Sheetal Gautam): டென்னிஸ் பிளேயரான சீதல் கெளதம், தன் துறையில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியவர். இப்போது ராபின் உத்தப்பாவின் மனைவி.

* பிரியங்கா சௌத்ரி (Priyanka Chaudhary): ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்த இவர், பின் சிறிது காலம் வங்கிப் பணியில் இருந்தார். சிறந்த சமூக செயற்பாட்டாளரும் கூட. இப்போது சுரேஷ் ரெய்னாவின் மனைவியாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

* கீதா பஸ்ரா (Geeta Basra): ஹர்பஜன் சிங்கின் மனைவி. பிரபல மாடலாகவும் முன்னணி இந்தி நடிகைகளில் ஒருவராகவும் இருந்தார்.

* ஹாசின் ஜகான் (Hasin Jahan): இவர்தான் முகமது ஷமியின் மனைவி! நிக்காவுக்கு முன் இவர் பிரபல மாடலாக இருந்தார். இப்போது முகமது ஷமிக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார்.

* ரித்திகா சஜ்தே (Ritika Sajdeh): பல முக்கிய நிறுவனங்களில் ஸ்போர்ட்ஸ் மானேஜராக பணிபுரிந்தவர் ரித்திகா சஜ்தே. பல கிரிக்கெட் வீரர்கள் இவரது க்ளையண்ட்ஸ். இப்போது இவர் ரோஹித் சர்மாவின் மனைவி!

* ஹெசல் கீச் (Hazel Keech): பிரிட்டிஷ் - மௌரியன் மாடலாகவும் நடிகையாகவும் இருந்த இவரே இன்று யுவராஜ் சிங்கின் மனைவி.

* அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma): இன்றும் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் நடிகையான அனுஷ்கா சர்மா... வேண்டாம் உங்களுக்கே தெரியும். விராட் கோஹ்லியின் மனைவி!

* விஜீதா பெந்தர்கர் (Vijetha Pendharkar): இந்தியாவின் தடுப்புச் சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் மனைவியான இவர் திருமணத்துக்கு முன்பும் பின்பும் மெடிக்கல் சர்ஜன்! சிறந்த மருத்துவர் என பெயர் எடுத்திருக்கிறார்.

* ஆர்த்தி (Aarthi): வீரேந்திர சேவாக்கின் மனைவியான இவர், மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றியவர்! இப்போது குடும்பத் தலைவி!