COFFEE TABLEஅழிவை நோக்கி மனிதன்‘‘மனிதனைத் தவிர்த்து இந்தப் பூமியில் வாழும் 10 லட்சம் உயிரினங்கள் விரைவில் அழியக்கூடும்...’’ என்ற அபாய சங்கை ஊதியிருக்கிறது ஐநா சபை.‘‘ரியல் எஸ்டேட் துறையின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்தான் இந்த அழிவுக்கு மூலகாரணங்களாக இருக்கப்போகின்றன.
இதனால் மனிதனுக்குத் தேவையான உணவு, நீர், காற்று போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே பெரும் பற்றாக்குறை ஏற்படலாம்...’’ என்று எச்சரிக்கை செய்கிறது ஐநா சபை.‘‘அழிவதற்காக காத்திருக்கும் பல்லுயிர்களை நாம் காப்பாற்றவில்லை என்றால் நம்மைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள்...’’ என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

மெகா போன்இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகக் காத்திருக்கிறது ‘ஒன்பிளஸ் 7 ப்ரோ’. 6.70 இன்ச் மெகா டிஸ்பிளே, 6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 48 எம்பி, 8 எம்பி, 16 எம்பி என மூன்று பின்புற கேமராக்கள், அதில் 16 எம்பி கேமராவை பாப் - அப் முறையில் மேலே இழுத்து செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வசதி, 4000 mAh பேட்டரி திறன் என்று லேட்டஸ்ட் டெக்னாலஜியில் இந்த போனை வடிவமைத்திருக்கிறார்கள். விலை ரூ.49,999.

பாயல் பாசம்

டோலிவுட் பாதாம்கீர் பாயல் ராஜ்புத், இப்போது தமிழில் கே.எஸ்.அதியமானின் இயக்கத்தில் நடிக்கிறார்.
விஷயம் இதுவல்ல. கோழி, காடை, கவுதாரி, நாய்க்குட்டி.. என அத்தனை பிராணிகளையும் கொஞ்சும் ‘Pet lover’ பொண்ணு பாயல். சமீபத்தில் தெலுங்கு படப்பிடிப்பிற்காக கிராமம் பக்கம் போனவர், அங்கே உள்ள சேவல் ஒன்றைப் பிடித்து ஆசை தீர கொஞ்சி மகிழ்ந்திருக்கிறார்.
அந்தப் பாசப்பிணைப்பை தன் இன்ஸ்டா பக்கத்தில் தெளித்துவிட்டு ஹார்ட்டின்களைக் குவித்துவிட்டார்.

டூர் மிஸ்ஸிங்

டாப்ஸி கடும் போதையில் ஹோட்டல் கார்டனிலேயே தூங்கிவிட்ட செய்திதான் பாலிவுட்டில் இப்போது ஹாட் டாக்.  ‘சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா’ என நீங்கள் சொல்வது காதில் கேட்பதால்... டாபிக்கை மாற்றுவோம்!சென்ற வருட சம்மர் வெகேஷனுக்கு  பார்சிலோனா சென்ற டாப்ஸி, இந்த முறை படப்பிடிப்பு இருப்பதால் சம்மர் டூரை மிஸ் செய்திருக்கிறார். அந்த வருத்தத்தை பார்சிலோனா புகைப்படத்துடன் தன் இன்ஸ்டாவில் பதிவிட, நாலு லட்சம் லைக்குகளை நெருங்கிக்கொண்டிருக்கிறார் டாப்ஸி.

கிரேட் மதர்

கடந்த வாரம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியாகியது. ஃபேஸ்புக்கில் 90 சதவீதத்திற்கு மேல் மார்க் வாங்கிய குழந்தைகள் மட்டுமே கொண்டாடப்படுவதையும், அவர்களின் மதிப்பெண் பட்டியலை பெற்றோர்கள் பதிவு செய்வதையும் அதிகமாகப் பார்த்திருப்போம்.

ஆனால், தில்லியைச் சேர்ந்த வந்தனா கொஞ்சம் வித்தியாசமானவர். இவரின் மகன் 60 சதவீதம் மார்க் எடுத்துள்ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மகனின் மதிப்பெண் பட்டியலைப் பதிவு செய்ததோடு, மகனைப் பற்றி பெருமையாக எழுதியுள்ளார் வந்தனா.
இந்தப் பதிவு 10 ஆயிரம் லைக்குகளை அள்ளிவிட்டது. ‘கிரேட் மதர்’ போன்ற கமென்ட்டுகள் குவிகின்றன.  

குங்குமம் டீம்