பசுமை போலீஸ்!



சண்டிகரைச் சேர்ந்த போலீஸ்காரர் தன் சொந்த சேமிப்பில் மரக்கன்றுகளை நட்டு அவர் மாவட்டத்தையே பளபள பசுமையாக  மாற்றியுள்ளார்!

யெஸ். பஞ்சாபின் சோனேபட் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திர சுரா, தன் சொந்த சேமிப்பிலிருந்து ரூ.30 லட்சம் செலவழித்து மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்பிரேஷன் பிரெஞ்சு கட்டடக் கலைஞர் லெ கார்பியூசி. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இளைஞர்களைத் திரட்டி, 152 கிராமங்களில் மரக்கன்றுகளை நடும் பணியை 2012ம் ஆண்டிலிருந்து சுரா செய்துவருகிறார். “எனது  சம்பளத்தை மரக்கன்றுகள் வாங்க செலவழிப்பதை என் குடும்பம் ஆதரிக்கவில்லை.

முன்னாள் ராணுவ வீரரான அப்பாவின் பென்ஷன் வீட்டுச் செலவுகளுக்கு உதவு கிறது...” என்னும் சுரா, கட்டடக்கலைஞர் கார்பூசின் ஒரு  சாலைக்கு ஒரு வகை மரம் என்னும் தியரியைப் பின்பற்றி தன் நர்சரியிலிருந்து தேவையான மரக்கன்றுகளை தேர்ந்தெடுத்து நடுகிறார்.  மேலும் பிற மாவட்ட மக்களுக்கும் குறைவான விலையில் மரக்கன்றுகளை வழங்கி வருவதுடன், கார்பன் வெளியீடற்ற சைக்கிள்  போக்குவரத்தை பிரசாரமும் செய்து வருகிறார்.            

-ரோனி