எரப்பா... சிம்புவின் இஞ்சிமரப்பா!



அண்ணாந்து பார்க்கவைக்கும் ஹைட்... டூ பீஸ் போட்டோ ஷூட்களில் கிறுகிறுக்க வைத்த சைட்... என குளுகுளுக்கிறார் சூப்பர் மாடலான  டயானா எரப்பா. மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வான’த்தில் சிம்புவின் காதலி சாயாவாக கோலிவுட்டுக்கு என்ட்ரி ஆகியிருக்கும்  டயானா, ஒரு பெங்களூரு தக்காளி.   ‘‘ஐயெம் எ லக்கி கேர்ள். என் கனவு நனவாகியிருக்கு. நான் அறிமுகமாகும் முதல் படமே மணி  சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், சந்தோஷ்சிவன் சார் காம்பினேஷனா அமைஞ்சிருக்கு. அதுவுமில்லாம மல்டி ஸ்டார்ஸ் படமா இருக்கறது  இன்னும் ஹேப்பியா இருக்கு..!’’ சந்தோஷ சிறகு விரிக்கும் டயானா தமிழில் பேசியும் அசத்துகிறார்.

‘‘கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசத் தெரியும். இங்க என் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள் இருக்கறதால தமிழ்ல பேச பழகிட்டேன். மணி சாரோட  படங்கள் அத்தனையும் பார்த்து ரசிச்சிருக்கேன். ரொம்ப பிடிச்ச படம் ‘மௌனராகம்’.பூர்வீகம் கர்னாடகா. பிறந்தது, வளர்ந்தது, படிச்சது  கூர்க்குல. காலேஜ் படிக்கிறப்ப மாடலிங்குல ஆர்வம் வந்தது. 2016 மிஸ் இந்தியால கலந்துகிட்டேன். அப்புறம் கிங்ஃபிஷர் காலண்டர்  ஷூட்ல நீங்க என்னை பார்த்திருக்கலாம்!’’ என கண்ணடிக்கும் டயானா, மும்பையில் இருக்கும்போதுதான் ‘செ சி வா’ வாய்ப்பு  வந்திருக்கிறது.

‘‘மணி சார் டீம் என்னை ஆடிஷன் பண்ணினாங்க. அதுல செலக்ட் ஆனதும், இரண்டாவது முறையா சென்னை ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க.  இதுக்கு அப்புறம்தான் ‘செக்கச் சிவந்த வானம்’ கிடைச்சது. படத்துல நான் சாயா கேரக்டர் பண்ணியிருந்தாலும், பார்வதி ரோலுக்கு தான்  ஆடிஷனாச்சு!மாடலிங்ல மனீஷ் மல்ஹோத்ரா, தருண்னு டாப் ஃபேஷன் டிசைனர்ஸோடு ஒர்க் பண்ணியிருந்தாலும் நடிப்புக்கு நான் புதுசு.  ஸ்பாட்டுல மணி சார் என்கிட்ட தமிழ்லயும் பேசுவார்! இந்த ஒரு படத்துல ஆக்ட்டிங் பத்தி கொஞ்சம் விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது!
‘கலா களவாணி...’, ‘மழைக்குருவி...’னு படத்துல எனக்கு ரெண்டு பாடல்கள்! ‘கலா களவாணி’ல சிம்புவோட காம்பினேஷன். செர்பியால  ஷூட் போயிட்டு வந்தோம். சிம்புவோட படங்கள்ல ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பிடிக்கும். இந்த படத்துல நான் பண்ணியிருக்கற சாயா  கேரக்டர் அச்சு அசல் நிஜத்துல நான் இருக்கிற மாதிரி யே இருக்கு!’’ என்ற டயானா, தன் உயரம் குறித்து பெருமைப்படுகிறார்.

‘‘இந்த ஹைட், மாடலிங்குக்கு ப்ளஸ். எங்க ஃபேமிலில எல்லாருமே கொஞ்சம் உயரமானவங்க. தவிர, நான் பாஸ்கட் பால் பிளேயர்  அண்ட் ரன்னர்! சின்ன வயசுல டான்ஸிலும் ஆர்வம் இருந்தது. கதக், க்ளாஸிக்கல் கத்துக்கிட்டிருக்கேன். வேலை இல்லாதப்ப வீட்டு  கிச்சன்ல இருப்பேன்! குக்கிங் அவ்வளவு பிடிக்கும்...’’ என்பவர் சமீபத்தில் தமிழில் பார்த்த படம், ‘அருவி’. ‘‘அடிக்கடி தமிழ்ப் படங்கள்  பார்ப்பேன். இதன் வழியாவும் தமிழ் கத்துக்கிட்டேன்னு சொல்லலாம்! தொடர்ந்து தமிழ்ப் படங்கள் பண்ற ஐடியா இருக்கு. பார்க்கலாம்...’’  என்கிறார் டயானா.

-மை.பாரதிராஜா