ரஹ்மானின் விநாயகர் கோயில்!



அரசியல் சக்திகள் கும்பல் வன்முறைகள், போலிச் செய்திகள் மூலம் மக்களை மத ரீதியாகப் பிரிக்க நினைத்தாலும் மனிதநேயம் கலாசார  எல்லைகளைக் கடந்தது என்பதை ரஹ்மான், விநாயகர் கோயிலைக் கட்டி நிரூபித்துள்ளார்.

கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஹ்மான் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. சிக்கஹோல் பகுதியில் விநாயகர் சிலையை  உருவாக்கி, அதனை பாதுகாப்பாகக் வைக்க கோயிலையும் கட்டி வருகிறார். “கடந்த ஆண்டு எங்களுடைய கோயிலிலிருந்த விநாயகர்  சிலை காணாமல் போய்விட்டது. கோயிலை பாதுகாப்பாகக் கட்டி சிலையை பீடத்தில் பொருத்தும் எண்ணம் அலைக்கழிக்க உடனே  செயலில் இறங்கிவிட்டேன்” என்ற ரஹ்மான் இதற்கு செலவான தொகையைக் கூற மறுத்துவிட்டார்.

“பிற மதத்தினரின் கோயில்களுக்குச் செல்வதும் அவர்களுடைய நம்பிக்கையை மதிப்பதும் எங்கள் பகுதியின் கலாசாரம்...” என  பெருமையாகப் பேசுகிறார் ரஹ்மான் வீட்டருகே உள்ள ரகு கௌடா. சிலையை முறையாக பூஜை செய்து விரைவில் கோயிலைத் திறக்கப் போகிறார்கள்!                            

- ரோனி