COFFEE TABLE



சண்டே ரகுல்

ஜிம்மில் ஹெவி ஒர்க் அவுட்களைப் பற்றி தெரிந்து கொள்ள ரகுல் ப்ரீத்சிங்கின் இன்ஸ்டா பக்கத்துக்குச் செல்லுங்கள். ஃபிட்னஸ்  வீடியோக்கள் கொத்து கொத்தாக மிளிர்கின்றன. ‘‘சண்டேனா ரெஸ்ட்னு யார் சொன்னது? அன்னிக்கும் நான் ஒர்க் அவுட்  பண்ணிட்டிருப்பேன்...’’ என புன்னகைக்கும் ரகுலுக்கு பிடித்தது அம்மா ஸ்பெஷலாக சமைக்கும் சிக்கன் கறியாம்!

ரியல் லைஃப் ஜூ


பத்து வகையான கொடிய விஷப் பாம்புகள், இருபது வகையான தேள்கள், 110 வயதான ஆமை, 6.5 அடி நீளமுள்ள இரண்டு முதலைகள்,  காட்டு எலிகள் என 400  ஊர்வன பிராணிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார் பிலிப்பே!பிரான்ஸில் உள்ள இந்த வீட்டை ‘ரியல்  லைஃப் ஜூ’ என்று வர்ணிக்கிறார்கள் சூழலியலாளர்கள். இருபது வருடங்களாக இப்பிராணிகளைச் சேகரித்து வரும் இந்த அதிசய மனிதரின்  வீட்டில் நாய், பூனை என்று செல்லப்பிராணிகள் எதுவுமே இல்லை என்பது ஆச்சரியம். பிலிப்பே காட்டுயிர்கள் பாதுகாப்புத்துறையில்  பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்சைமர் ஆபத்து


‘‘மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் ‘அல்சைமர்’ என்கிற மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்...’’ என்று பீதியைக்  கிளப்பியிருக்கிறது சமீபத்திய ஆய்வு.‘‘மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்றவற்றால் மறதி நோய் வரும்...’’ என்று ஆய்வுகள்  சொன்னாலும், அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், மாசுபட்ட காற்றுக்கும் மறதி நோய்க்கும் உள்ள தொடர்பை விஞ்ஞானிகளே  ஒப்புக் கொள்கின்றனர்.‘‘உலகளவில் இன்னும் 30 வருடங்களில் மறதி நோய் மூன்று மடங்கு அதிகரிக்கும்...’’ என நிபுணர்கள்  எச்சரிக்கின்றனர்.

எல்இடி ஹெட்போன்


ஹெட்போனில் விநோதமாக எதையாவது செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன நிறுவனங்கள். அந்த வகையில் ‘ஐபால்’  நிறுவனம் எல்இடி லைட்டுகள் பொருத்தப்பட்ட ப்ளூடூத் ஹெட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது! எஃப்.எம் மற்றும்  கம்ப்யூட்டருடன் இணைக்க ஆக்ஸ் கேபிள், மொபைலுடன் இணைக்க மைக்ரோபோன், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் என கச்சிதமாக  இதை வடிவமைத்திருக்கிறார்கள். விலை ரூ.2,499.

பிங்க் கேர்ள்ஸ்

தென்னிந்திய மொழிப்படங்களே வேண்டாம் என்று பாலிவுட்டில் தஞ்சமடைந்துவிட்டார் டாப்ஸி. அங்கே அவருக்கு டர்னிங் பாயின்ட்  கொடுத்த ‘பிங்க்’ படம் வெளியாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நிகழ்ந்த ஸ்வீட் சம்பவங்களைப்  புகைப்படமாக்கி ‘பிங்க் கேர்ள்ஸ்’ என்ற தலைப்பில் பதிவிட, டாப்ஸியின் இன்ஸ்டா பக்கத்தில் லைக்குகள் மழை கொட்டுகிறது.

-குங்குமம் டீம்