சாதிக்கும் தலித் மாணவர்கள்!



இவ்வாண்டின் பிப்ரவரி மாதம் வரை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகைகளைப் பெறுவதில் மகாராஷ்டிரா மாநிலம் டாப்பில் உள்ளது. அதிலும் தலித் மாணவர்கள் முன்னிலை வகிப்பது பெருமையான செய்தி. தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (NOS) திட்டத்தில் கிடைத்த 72 உதவித் தொகைகளில், நாற்பதை மகாராஷ்டிரா மாநிலம் தட்டிச் சென்றுள்ளது. தலா ஆறு கல்வி உதவித் தொகைகளைப் பெற்று அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளன.

2016 - 17 காலகட்டத்தில் கிடைத்த 108 உதவித் தொகைகளில் 53 உதவித் தொகைகளை மகாராஷ்டிரா பெற்றது. மீதியுள்ள இடங்களை உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு ஆகியவை பகிர்ந்துகொண்டன. முனைவர் படிப்புகளுக்கான இடங்களிலும் தலித் மாணவர்கள் அதிகரிக்கக் காரணம், மாநில அரசும் தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு சமமான திட்டங்களை மேற்கொண்டு வருவதுதான் என்கிறார்கள்                

- ரோனி