மேன்லி ஸ்டைல்!



இந்தியாவின் பெயரை செஸ் களத்தில் உரக்கச் சொல்லி அமர்க்களப்படுத்திவிட்டார் குட்டி கிராண்ட்மாஸ்டர் பிரக்னாநந்தா.
- சுரேஷ், திருச்சிற்றம்பலம்; மாணிக்கவாசகம், கும்பகோணம்; பிரீத்தி, செங்கல்பட்டு; நரசிம்மராஜ், மதுரை; பூதலிங்கம், நாகர்கோவில்; முத்துவேல், கருப்பூர்; ஜெயச்சந்திரபாபு, மடிப்பாக்கம்.

தளபதியின் ‘சர்கார்’ தகவல்களோடு மெஸ்மரிச ஸ்டில்கள் மேன்லி ஸ்டைலிசம்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; நரசிம்மராஜ், மதுரை; மதுபாக்யா, திருநெல்வேலி.

லயோலா லைலா மிஸ் இந்தியா அனுகிரீத்தி பற்றிய அக்கறை டீட்டெய்ல் அசத்தல்.
- முத்துவேல், கருப்பூர்; சைமன்தேவா, விநாயகபுரம்; நரசிம்மராஜ், மதுரை.

விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ‘குங்குமம்’ கொடுத்த ஐடியா உற்சாகப் பெருமை.
- மயிலை கோபி, திருவாரூர்; வளர்மதி, கன்னியாகுமரி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; மதுபாக்யா, திருநெல்வேலி.

காவியா ரெட்டியின் காக்டெய்ல் ரூல்ஸ் உடைகளும், விளக்கங்களும் ட்ரெண்டிங் ஹிட்.
- கைவல்லியம், மானகிரி.

ஆசிரியர் பகவானைத் தடுத்த மாணவ, மாணவி யரின் அன்பு நல்லாசிரியர் விருதையும் மிஞ்சிய பெருமிதம்.
- பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்; சுரேஷ், திருக்கண்டேஸ்வரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; ராஜ்குமார், குன்னூர்; பாக்கியவதி,
மேகாமண்டபம்; கைவல்லியம், மானகிரி.

கடனுக்குள்ளானாலும் பாரம்பரிய விவசாய ரகங்களை நமக்கு அளித்துவிட்டுச் சென்ற தாதாஜியின் புகழை விவசாயிகள் என்றும் மறக்கமாட்டார்கள்.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வளர்மதி, கன்னியாகுமரி; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

கடல்மேல் பிறந்து கண்ணீரில் மிதக்கும் மீனவர்களின் வாழ்வை ரத்தக்கவுச்சியுடன் விவரித்த கட்டுரை வேதனை பிரளயம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஜெயச்சந்திரபாபு, சென்னை.

ஐஎஸ்ஓ தரத்தில் மண்பானை சமையலை அர்ப்பணிப்பாகச் செய்யும் சுரேஷ், பொன்செல்வி தம்பதியினரின் கீரைக்கூடு, நவதானிய வத்தல்குழம்பு படிக்கும்போதே செம ருசி.
- சு.நவீனாதாமு, பொன்னேரி; முருகேசன், கங்களாஞ்சேரி; ஜானகி ரங்கநாதன், சென்னை; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; சித்ரா, திருவாரூர்;
ராமகண்ணன், திருநெல்வேலி.

ஆத்தாவின் காருண்ய கருணையை நெகிழ்ச்சியோடு கூறியது கவிதை வனத்தின் குருவி கவிதை.
- சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

எவர்சில்வர் சிற்பி சோமசுந்தரத்தின் விநோத ஆர்வம் வியக்கவைக்கிறது.
- சந்திரமதி, சென்னை.

கருப்பர் நகரின் வரலாறும், சுவர்வரி பற்றிய ஹிஸ்டரி தகவல்களும் மனதை மயக்கின.
-டி.எஸ்.தேவா, கதிர்வேடு; ஜெயச்சந்திரபாபு, சென்னை.

சின்னத்திரை பெண்ரைட்டர், சிஇஓ சுபா வெங்கட்டின் பத்திரிகை மற்றும் சின்னத்திரை அனுபவங்கள் பெண்களை சாதிக்கத்தூண்டும் தன்னம்பிக்கை டானிக்.
- லக்‌ஷித், மடிப்பாக்கம்.

- ரீடர்ஸ் வாய்ஸ்