எங்கே சிவ - சக்தி?



விஷால் ஓபன் டாக்கில் சேவ் சக்தி இருந்தது. ஆனால், சிவ - சக்தி சங்கதி இல்லையே பாஸ்?!
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; முருகேசன், கங்களாஞ்சேரி.

மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் Eye Guide போற்ற வேண்டிய முயற்சி.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சீரியல் இயக்குநர் ஒ.என்.ரத்னத்தின் வாழ்க்கை, அவர் எழுதி இயக்கும் தொடர்களைப் போலவே கலகலப்பாக இருந்தது.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; முத்துவேல், கருப்பூர்.

‘ஹோம் அக்ரி’ தொடரில் முள்முருங்கை வளர்ப்பு முறை அசத்தல்.
- முத்துவேல், கருப்பூர்; மனோகர், கோவை; சித்ரா, திருவாரூர்.

எழுத்தாளரும், இயக்குநரும்தான் சினிமாவின் முதுகெலும்பு என ஆர்.சுந்தர்ராஜன் சொன்ன பதில் நூற்றுக்கு நூறு உண்மை!
- வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயில்; தேவா, கதிர்வேடு; பூதலிங்கம், நாகர்கோவில்; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முருகேசன், கங்களாஞ்சேரி: மதுபாக்யா, மும்பை; சண்முகராஜ், திருவொற்றியூர்.

ஐஸ்ஹவுஸ் பெயருக்குப் பின்னாலுள்ள பிரமாண்ட வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது.
- ப.மூர்த்தி, பெங்களூரு; ஜெரிக், கதிர்வேடு; பூதலிங்கம், நாகர்கோவில்; லட்சுமி நாராயணன், வடலூர்.

ஸ்பாஞ்சில் தெரியும் பெண்ணின் அழகில் நெஞ்சம் கரைந்துபோனது.
- மயிலைகோபி, அசோக்நகர்.

‘மந்திரக்குரல்’, ‘ஞாபகம்’ தலைப்பிலான இரு கவிதைகளும் அருமை.
- எம்.சேவுகப்பெரு மாள், பெருமகளூர்; முத்துவேல், கருப்பூர்.

இளமைக் காதலின் உற்சாகத்தை மனதில் பொழிந்து காதில் இன்னும் கேட்கிறது ஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் ‘மழைச்சத்தம்’.
- மதுபாக்யா, மும்பை; முத்துவேல், கருப்பூர்.

செக்யூரிட்டிகளின் அகத்தையும் புறத்தையும் அலசிய ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஹிட்ஸ்களை அள்ளுகிறது.
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை; பூதலிங்கம், நாகர்கோவில்; சண்முகராஜ், திருவொற்றியூர்; சோழாபுகழேந்தி, கரியமாணிக்கம்; சைமன்தேவா, விநாயகபுரம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மதுரை கூரைக்கடையின் கறிதோசை செய்முறையோடு, கடையின் வரலாறும் சூடு குறையாத சுவை.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முத்துவேல், கருப்பூர்; நரசிம்மராஜ், மதுரை.

இணையத்திலும் விரல்நுனியில் தமிழ்மொழி முந்துவது மகிழ்ச்சியுடன் பெருமையும் கூட.
- ப.மூர்த்தி, பெங்களூரு; நரசிம்மராஜ், மதுரை.

தமிழை முதல்பாடமாக படித்து காமிக்ஸ் ஆர்வலராக மாறிய சுரேஷ்சந்த், பாராட்டப்பட வேண்டிய மனிதர்தான்.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்.

யானையை மனிதர்கள் எப்படி கையாண்டார்கள் என்ற அவலத்தைக் கூறி தீர்வு சொன்ன நியூஸ் வியூஸ், அட்டகாசம்.
- ஜானகிரங்கநாதன், சென்னை; நரசிம்மராஜ், மதுரை.

- ரீடர்ஸ் வாய்ஸ்