ராணுவத்துக்கு கதகதப்பு!



ஏடாகூடமாக நினைக்கவேண்டாம். பனிமலை முகடுகளில் பாடுபடும் இந்திய ராணுவத்துக்கு, லடாக்கைச் சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர் சோனம் வான்சுக் சோலார் கூடாரங்களை உருவாக்கித் தந்திருக்கிறார். இதன்மூலம் குளிரை சமாளித்து கூடாரத்தில் சும்மா ஜம்மென ஓய்வெடுக்கலாம். கதகதப்பு கூடாரங்கள் குறைந்தபட்சம் 10 ஆயிரம் தேவை என ஆர்மி அதிகாரிகள் கூறியுள்ளதால் இதற்கென தயாரிப்பு பட்டறையை உருவாக்கவிருக்கிறார் வான்சுக்.

‘‘இந்தக் கூடாரங்களை எளிதில் கொண்டு செல்லலாம். எங்கு தேவையோ அங்கு சட்டென செட் செய்யலாம். வெளியில் மைனஸ் 20 டிகிரி என்றாலும் உள்ளே கதகதப்பு குறையாது!’’ என்கிறார் சோனம் வான்சுக். தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இழைகளால் இக்கூடாரங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதால் சூழல் பாதிக்கப்படாது.                                      

- ரோனி