பிளாஸ்டிக் பர்கர்!



பர்கர், பீட்ஸா எல்லாம் எதற்கு? இட்லி, தோசை, சப்பாத்தி என தின்றவர்களுக்கு வாழ்க்கை சலிக்காமலிருக்கத்தானே? அப்படியிருக்க ஒரே ஒரு பர்கரைத் தின்ற தில்லி மனிதரின் வாழ்க்கை தாறுமாறாகிவிட்டது. தில்லியைச் சேர்ந்த ராகேஷ்குமார், ராஜ்சௌக் மெட்ரோ ஸ்டேஷன் அருகி லிருந்த பர்கர் கிங் கடையில் ஆசையும் ஆர்வமுமாக சீஸ் வெஜ் பர்கரை வாங்கினார். பசியைப் போக்க குதப்பித் தின்றவருக்கு அடுத்த சோதனை விரைவிலேயே தொடங்கியது.

வேகமாகத் தின்றவருக்கு தொண்டையில் ஏதோ குத்தியதுபோல எரிச்சல் தோன்ற, கடை மேலாளரிடம் முறையிட்டார். எரிச்சலும் வலியும் அன்லிமிட்டட்டாகப் பெருக, உடனே கன்னாட் பிளேசிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில், பர்கரிலிருந்த பிளாஸ்டிக்தான் பிரச்னைக்குக் காரணம் எனத் தெரிந்து. இப்போது பர்கர் கடை மேலாளர் லாக்அப்பில் கம்பி எண்ணுகிறார்.                                      

- ரோனி