ஜெனரல் நாலெட்ஜ்!சமீபத்தில் தனது ஐபோனுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு, கூகுள் பிக்‌சலின் லேட்டஸ்ட் போன் ஒன்றை வாங்கியிருக்கிறார் அமலாபால். செல்போனைப்  போலவே, காஃபியும் தத்துவமும் அவருக்குப் பிடித்த விஷயங்கள்.

சென்னைக்கும் மும்பைக்குமாகப் பறந்து கொண்டிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் சூர்யா படத்தின் ஷெட்யூலை முடித்துவிட்டு, அன்றே மும்பையில்  அஜய்தேவ்கன் ஷூட்டிங்கிலும் பங்கேற்றிருக்கிறார் ரகுல். சின்ஸியர் பொண்ணு!

தமிழில் விக்ரம், விஜய், விஷால் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘மகாநதி’ படத்துக்காக 120  காஸ்ட்யூம்களில் நடித்ததை பிரமிப்பாகக் கூறுகிறார் கீர்த்தி.

தெலுங்கில் வெளிவந்த ‘ஆவ்’ படத்தில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். அதில் ஐந்தே ஐந்து நாட்கள் மட்டும் நடித்ததற்காக அவர் ரூ.50 லட்சம்  பேமென்ட் கேட்டு வாங்கினார் என டோலிவுட் கிசுகிசுக்கிறது!

மகேஷ்பாபுவின் சமீபத்திய ஹிட் படமான ‘பாரத் அனே நேனு’வின் அறிமுக ஹீரோயின் கியரா அத்வானி செம குஷியில் இருக்கிறார்.  ‘அவுட்ஸ்டாண்டிங் அறிமுகம்’ என ராம்சரண் பாராட்டியதே அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை மும்பையில் சந்தித்துப் பேசியதில் இருந்து அவரது தீவிர ரசிகராகிவிட்டார் ஷாரூக்கான். நோலனுடன்  சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பொக்கிஷமாகப் பாதுக்காத்து வருகிறார்.

சினிமாவைப் போலவே குறும்படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் ரெஜினா கஸாண்ட்ரா. சமீபத்தில் டீன் ஏஜ் பெண்களின்  பர்சனல் விஷயங்களைப் பேசும் ‘In coversation with my period’ என்ற குறும்படம் இவரது நடிப்பில் யூடியூப்பில் வெளியாகி 6 லட்சம்  பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறது.

லண்டனில் ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி சீரிஸில் நடித்திருக்கும் எமி ஜாக்சன், அங்கே நடந்த மாரத்தான் போட்டியிலும் கலந்துகொண்டு ஓடியிருக்கிறார்.  ‘Yes... so much love and positivity around the city’ என பூரிக்கிறார் எமி.

இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், சமீபத்தில் தன் சக நடிகரும், நீண்ட நாள் நண்பருமான சுனில் ஷெட்டியைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறார். மும்பை  மீடியாக்கள் அக்‌ஷயிடம், ‘‘‘2.0’ ரிலீஸ் எப்போ?’’ எனக் கேட்டிருக்கிறார்கள். ‘‘நோ ஐடியா!’’ என்று வெளிப்படையாக பதில் சொல்லியிருக்கிறார் அக்‌ஷய்.

 ‘‘ரெகுலராக ஃபிட்னஸ் ஒர்க் அவுட் என்பது நம் உடழலகை பராமரிக்க மட்டுமல்ல. நமக்கு நாமே தன்னம்பிக்கையை அளித்துக் கொள்ளவும்தான்! குட்  லுக், ஸ்கின் மினுமினுப்பு, தேஜஸ் எல்லாம் ஃபிட்னஸினால் வரும்...’’ என சிலிர்க்கிறார் ‘அனேகன்’ ஹீரோயின் அமைரா தஸ்தூர்.

 ‘துப்பறிவாளன்’ ஹீரோயின் அனு இமானுவேலை நினைவிருக்கிறதா? இப்போது டோலிவுட்டில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா, ரவிதேஜா என  வரிசையாக படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இதில் அல்லு அர்ஜுனின் படம் தமிழ், இந்தியில் டப் ஆகியிருப்பதால் அனு ஹேப்பி.

கேட்டன் (Catan) என்ற போர்டு கேம் விளையாட்டில் அமீர்கான் கில்லாடி. அது அவரது ஃபேவரைட் ஹாபியும் கூட! அந்த விளையாட்டை  கண்டுபிடித்த Klaus Teuber, சமீபத்தில், தான் எழுதிய ‘கேட்டன்’ குறித்த புத்தகத்தை அமீர்கானுக்கு பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார்.  அவ்வளவுதான். ஆனந்தத்தில் திக்குமுக்காடிவிட்டார் அமீர். ‘இந்த பர்த் டேவுக்கு வந்த கிஃப்ட்டுகளில் இதுதான் பெஸ்ட் கிஃப்ட்’ என்கிறார் அமீர்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘நீரளி’ என்ற படத்தில் நடிக்கிறார் பார்வதி நாயர். விஷயம் அதுவல்ல. இந்தப் படத்தின் இசை சேர்ப்பு  பணியின்போது டிரம்ஸ் சிவமணியின் லைவ் கம்போஸிங் நடக்க, அங்கே சர்ப்ரைஸ் விசிட் அடித்து, சிவமணியைப் பாராட்டியிருக்கிறார் மோகன்லால்.

ஷூட்டிங் பிரேக்குகளுக்கிடையே ஆங்கிலப் புத்தகங்கள் வாசிப்பது தமன்னாவின் ஹாபி. சமீபத்தில் தன் ஃபிட்னஸ் டிரெயினர் பாயல் கித்வானி  எழுதிய ‘Own the bump’ என்ற புத்தகத்தை வாசித்திருக்கிறார்.

சமீபத்தில் ஷார்ஜாவில் நடந்த டான்ஸ் ஷோ ஒன்றில் பிரபுதேவாவுடன் ஒரே மேடையில் ஆடி அசத்திவிட்டார் நிக்கி கல்ராணி. அந்த ஷார்ஜா  ட்ரிப்பில் நிக்கியுடன், ப்ரணிதா, இஷா தல்வார் என ஒரு கலர்ஃபுல் டீமே கலக்கியிருக்கிறது.

நியூயார்க்கில் ‘குவாண்டிகோ’ சீஸன்3 டிவி சீரிஸ் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. இடையே சில வாரங்கள் அவருக்கு பிரேக்  கிடைக்க, உடனே தன் அம்மாவை அழைத்துக் கொண்டு சம்மர் ட்ரிப்பாக அயர்லாந்து சென்று வந்திருக்கிறார்.

மல்லுவுட்டில் ‘பிருத்விராஜ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார் பிருத்விராஜ். ‘‘சொந்தமா தயாரிப்பு  நிறுவனம் தொடங்கணும்னு கனவு கண்டேன். இப்பதான் அது கைகூடியிருக்கு. நானும் மனைவி சுப்ரியாவும் இந்நிறுவனத்தை தொடங்கியிருக்கோம்.  நல்ல சினிமாவைக் கொடுப்பது எங்க லட்சியம்!’’ என்கிறார் பிருத்விராஜ்.  

தொகுப்பு: மை.பாரதிராஜா