COFFEE TABLEசிரியா, ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் இந்தக் கொலைகள் அதிகம்!

‘‘இந்தியாவில் கடந்த முப்பது வருடங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்...’’ என்ற அதிர்ச்சியான  ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறது புலனாய்வு சர்வே ஒன்று. சிரியா, ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் இந்தக் கொலைகள்  அதிகம் என்பது இன்னொரு பேரதிர்ச்சி. பத்திரிகையாளர்களைக் கொலை செய்வதில் ஈராக் முதலிடத்தில் உள்ளது.

அங்கே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 336. இதற்கு அடுத்த இடங்களில் முறையே பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, பாகிஸ்தான், ரஷ்யா  இருக்கின்றன. அதே நேரத்தில் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்படும் நாடாக நார்வே தேர்வாகியுள்ளது. ஆனால், உலகளவில் கடந்த பத்து  ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கிறது என ஆறுதல் அளிக்கிறது இந்த ரிப்போர்ட்.

ஸ்டைலிஷ் ப்ரியங்கா

ஹாலிவுட், பாலிவுட் என்று எந்நேரமும் பிஸியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ் அரசி. அவ்வப்போது கவர்ச்சியான  புகைப்படங்களைப் பதிவேற்றி ரசிகர்களைக் கிறங்கடிப்பவர். அப்படி சமீபத்தில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தட்டிவிட்ட ஒரு புகைப்படம்  கொதிக்கும் கோடையிலும் ஜில்லென்று குளிர வைக்கிறது. நீல நிற பிளேசர் உடையில் ஸ்டைலாக நடந்துவரும் ப்ரியங்காவுக்கு லட்சக்கணக்கில்  ஹார்ட்டின்களும், கமெண்ட்டுகளும் குவிகின்றன!

பவுலிங் லேடி

நமக்கு மொக்கையாகத் தெரியும் பதிவுகள் கூட சில சமயங்களில் பெரிய வைரலாகிவிடும். அப்படியொன்று இது. பெரிய மாலுக்குச் சென்று பவுலிங்  விளையாட வேண்டும் என்பது ஒரு பெண்ணின் ஆசை. அது நிறைவேறுகிறது. ஆனால், அவர் விளையாடியது தோல்வியில் முடிகிறது.

இதை  வீடியோவாக்கி ஃபேஸ்புக்கின் ‘Unilad’ பக்கத்தில் ‘Woman Epicly Fails At Bowling’ என்ற தலைப்பில் வெளியிட, ஒரு கோடியே 33 லட்சம் பேர்  பார்த்து வைரலாக்கியுள்ளனர். பத்து லட்சம் பேர் தங்கள் பக்கங்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். வெற்றி தோல்விகளுக்கு  அப்பாற்பட்டது அல்லவா வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள்?!

அதிக நேரம் பேட்டரி நிற்கும் செல்போன்

ஸ்மார்ட்போன் பயனாளிகளின் முக்கிய பிரச்னையே ‘பேட்டரி நிற்கறதே இல்ல...’ என்பதுதான். இக்குறையைப் போக்க ‘மோட்டோரோலா’ நிறுவனம்  ‘மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ்’ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக நேரம் பேட்டரி நிற்கும் என்பதோடு வேகமாக சார்ஜும் செய்ய  முடியும் என்பது இதில் ஹைலைட். 64 ஜிபி இன்பில்ட் மெமரி, பின்புற கேமரா 13 எம்பி, செல்ஃபி கேமரா 8 எம்பி, 5.5 இன்ச் டிஸ்பிளே, 4 ஜிபி ரேம்  என்று பல வசதிகளைக் கொண்ட இந்த மொபைலின் விலை ரூ.13,999.

சுறா படகு

ஆழ்கடலில் வசிக்கும் சுறா, திமிங்கலங்களைப் போல படகுகளை வடிவமைப்பதுதான் இப்போது வெளிநாடுகளில் ஃபேஷன். கடலில் துள்ளிக் குதிப்பது,  வானத்தை நோக்கி உயர எம்பி டைவ் அடிப்பது... என நிஜ சுறாவுக்கே சவால்விடும் அளவுக்கு ஏகப்பட்ட  சாகசங்களை இந்தப் படகில் செய்ய  முடியும். இதில் பயணிப்பதை வீடியோவாக்கி ஃபேஸ்புக்கின் ‘In the Know Innovation’ என்கிற பக்கத்தில் ‘Embrace Your Inner Shark While  Riding This Crazy-Looking Torpedo Watercraft’ என்ற தலைப்பில் பதிவிட, இரண்டே வாரத்தில் 20 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.

குங்குமம் டீம்