டீ விற்கும் மாரத்தான் பெண்!



கோவையைச் சேர்ந்த கலைமணி, மாநில அளவில் மாரத்தானில் (41 கி.மீ) ஓடி நான்கு தங்க மெடல்களை வென்றவர்.

இன்று டீக்கடை வைத்து அந்த வருமானத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். ‘‘டீக்கடைல வேலை செஞ்சா தினசரி செலவு போக ஐநூறு ரூபா கைல நிக்கும்...’’ என்ற கலைமணி, ‘‘அரசாங்கத்துக்கிட்ட இருந்து எந்த உதவியும் இதுவரையும் கிடைக்கல...’’ என்கிறார். பதக்கங்கள் வெல்வதற்காக இளம் வயதில் தினசரி 21 கி.மீ. ஓடி பயிற்சி செய்திருக்கிறார். பல்வேறு பதக்கங்கள் வென்ற போட்டிகளுக்கு சென்று வர போக்குவரத்துச் செலவுகளுக்கு நண்பர்கள் உதவியிருக்கிறார்கள்.

ரோனி