ரயில்வே டிசைனில் பள்ளி!



ஒரே மாதிரி டிசைனில் அமைந்த பள்ளியில் உட்கார்ந்து படித்தால் போரடிக்க வாய்ப்பிருக்கிறது என ராஜஸ்தான் அரசு எண்ணியதோ என்னவோ, அச்சு அசல் ரயில்வே பெட்டி டிசைன் போலவே பள்ளியை மாற்றிவிட்டனர்.

எஜுகேசன் எக்ஸ்பிரஸ் என்ற தீமில் பள்ளிகளை பயணிகள் பயணிக்கும் ரயில்வே பெட்டி போல மாற்றியிருக்கிறார்கள்.தலைமையாசிரியரின் அறை ரயில் எஞ்சின் போலவும், மாணவர்கள் விளையாடும் வராண்டா ரயில் நிலைய பிளாட்பாரம் போலவும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘‘ரயிலில் பயணிப்பது எப்போதுமே மாணவர்களை உற்சாகப்படுத்தும். அதனால்தான் பள்ளியின் வெளிப்புறத்தை வண்ணமயமாக ரயிலைப் போலவே உருவாக்கினோம்...’’ என்கிறார் பொறியாளர் ராஜேஷ் லாவணியா. இவரது ஐடியாவில் இப்போது டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய மாடலிலும் வகுப்பறைகளை டிசைன் செய்து வருகின்றனர்.

ரோனி