மகனை ஜெயிலில் போடுங்க!



திடீரென வீட்டிலுள்ள குழந்தைகள் காணாமல் போனால் பெற்றோர் எப்படி பதறுவார்கள்? ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தந்தை வேறு மாதிரியாக நடந்துகொண்டிருக்கிறார்!

கார்கர் பகுதியைச் சேர்ந்தவர் ஜகானிகான். இவரது பனிரெண்டு வயது மகன் திடீரென காணாமல் போனான். புகார் கொடுத்தார். மகனை போலீசார் பிடித்துவிட்டனர். ஆனால், ‘‘இவனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் பதினெட்டு வயது வரை ‘கெஸ்ட்’ போல் தங்க வையுங்கள்...’’ என்று சொல்லிவிட்டார் ஜகானிகான்! காரணம், இவரது மகன் இப்படித்தான் அடிக்கடி வீட்டை விட்டு ஓடி விடுகிறானாம். ஒவ்வொருமுறையும் மகனைத் தேடிக் கண்டுபிடிக்கும் விரக்தியில்தான் இப்படிச் சொல்லி இருக்கிறார்!   

ரோனி