ஆண்களின் ரிசர்வேஷன்



ரீடர்ஸ் வாய்ஸ்

வாரிசுப் பட்டாளங்களின் அறிமுகப்படலத்தை அசத்தலாக எழுதி அமர்க்களப்படுத்தி விட்டீர்கள்.
- மகிழை.சிவகார்த்தி, சென்னை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பூதலிங்கம், நாகர்கோவில்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

எதிர்காலத்துக்கான வாழ்வை பத்திரப்படுத்தும் விதை வங்கி ஆச்சரியத்தோடு நிறைவு தந்தது.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; நாகராஜன், குண்டூர்; நரசிம்மராஜ், மதுரை; மனோகர், கோவை; மாணிக்கவாசகம், கும்பகோணம்; வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஆண்களின் ரிசர்வேஷன் கோட்டாவில் கோட்சூட் செய்தியை ‘குங்குமம்’ தந்தது மகிழ்ச்சி.
- நரசிம்மராஜ், மதுரை.

டஜன் கணக்கிலான குழம்பு வகைகளை அள்ளித்தரும் ‘லன்ச் மேப்’பின் சேலம் குகைப்பகுதி ஸ்பெஷல் அசத்தல். கூடுதலாக இனிப்புகளின் ரெசிபி பிரமாதம்.
- முத்துவேல், கருப்பூர்; ராமகண்ணன், திருநெல்வேலி; முருகேசன், கங்களாஞ்சேரி; பிரதீபா ஈஸ்வரன், சேலம்; ஜெயராஜ், சென்னை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

மடிப்பாக்கம் லக்ஷ்மியின் டாக் ஹாஸ்டல் இருப்பது சென்னையா, வெளிநாடா? பிரமிப்பு தந்தது.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; சிவா, மதுரை; முத்துவேல், கருப்பூர்; ஆனி அஞ்சலின், சென்னை.

‘தலபுராணத்’தில் சென்னையின் கதையைச் சொல்லும் ஆரம்பமே படீர் பட்டாசு!
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; நாகராஜன், திருச்சி; முத்துவேல், கருப்பூர்; ராஜ்குமார், குன்னூர்; சோழாபுகழேந்தி, கரியமாணிக்கம்.

இன்னொரு பெண்ணுக்கு குழந்தை பிறக்காத வலியை தன் வலியாக உணரும் தாய்மை உணர்வை சொன்ன ‘வலி’ கிளாசிக்
சிறுகதை.
- மல்லிகாகுரு, சென்னை; பூதலிங்கம், நாகர்கோவில்; ஜானகி ரங்கநாதன், சென்னை; முத்துவேல், கருப்பூர்; சித்ரா, திருவாரூர்; நாகராஜன், திருச்சி.

சென்னை கடற்கரைகளின் இரவு வாழ்க்கையை ஃப்ளோரசன்ட் வெளிச்சத்தில் படம் பிடித்துக் காட்டியது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ தொடர்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; மைதிலி, கங்களாஞ்சேரி; தேவதாஸ், பண்ணவயல்.

தமிழ்க்கவிதைகளின் புதுப்புது வடிவங்களைச் சொல்லி எதிர்காலத்தை கணித்த யுகபாரதியின் ‘ஊஞ்சல் தேநீர்’, அபூர்வ ருசி.
- மனோகர், கோவை.

‘நானானவன்’, ‘புன்னகைப்பூ’ ஆகிய தலைப்புகளில் வெளிவந்த கவிதைகள் அருமை.
- சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

 வாட்ச் கலெக்டர் பிரஷாந்த் பாண்டேவின் ஹெச்.எம்.டி கலெக்‌ஷன்களும், அதற்கான காரணமும் சூப்பர்.
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு; நவீன்சுந்தர், திருச்சி; முத்துவேல், கருப்பூர்; நாகராஜன், திருச்சி; பிரீத்தி, செங்கல்பட்டு; நரசிம்மராஜ், மதுரை.

‘மிஸ்டர் சந்திரமௌலி’ செய்தியில் ரெஜினாவின் தாராள நெஞ்சும், குவிந்து உதடுகளும் இதயத்தின் லப்டப்பை எகிறவைத்தன.
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்; இந்திரன், சென்னை; முத்துவேல், கருப்பூர்; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தாய் மண்ணுக்காக உழைக்கும் பழங்குடிப்பெண் ஜெயந்தி பருடாவின் நோக்கமும், லட்சியமும் அசாதாரணமானது.
- சோழாபுகழேந்தி, கரியமாணிக்கம்; கௌரிபாய், திருவள்ளூர்; சித்ரா, திருவாரூர்.