சூப்பர் காதலன்!
தாலிகட்டிய மனைவியை அவள் விரும்பிய காதலனுடன் சேர்த்து வைக்கும் அமேசிங் காதலரை சினிமாவில் பார்த்திருப்போம். ஒடிஷாவில் அசலாக அது நடந்திருக்கிறது!
சுந்தர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த பாசுதேப் தாப்போ, ஜார்சுகுடா டெப்திகி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை ஊர் உறவு வாழ்த்த மணம் செய்து கொண்டார். பெண் வீட்டார் சார்பாக வந்த மூன்று பேரில் ஒருவர் அப்பெண்ணுடன் நெருக்கமாக சுற்றித் திரிய, பாசுதேப்பின் உறவுகள் டென்ஷனாகி அவரை அடித்து நொறுக்கினர்.
அப்போது ‘அவர் என் லவ்வர்’ என மணப்பெண் சொல்ல... மொத்த ஊரும் இருவருக்கும் எதிராகத் திரண்டது. பாசுதேப், தன் ஊர், உறவுகள் மற்றும் பெண்ணின் மூன்று சகோதரர்களையும் சமாதானம் செய்து, பெண் விரும்பிய காதலரை அதே மேடையில் மணமகனாக்கி இருக்கிறார்!.
-ரோனி
|