ஹாலிவுட் த்ரில்!
ரீடர்ஸ் வாய்ஸ்
அரசு துறைகளில் அடுத்து சர்ச்சையில் சிக்கியிருப்பது பதிவுத்துறையா? திருமணத்திற்கும் தடையெனில் எரிமலையாகுமே தமிழகம்! - முத்துவேல், கருப்பூர்; முருகேசன், கங்களாஞ்சேரி; மாணிக்கவாசகம், கும்பகோணம்.
அகதிகளை கடத்தும் பார்டர் பிசினஸ், ஹாலிவுட் பட த்ரில் பிளஸ் திகைப்பு தந்தது. - த.சத்தியநாராயணன், அயன்புரம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மாணிக்கவாசகம், கும்பகோணம்; சண்முகராஜ், சென்னை.
வீட்டுக்குள் மியூசியம் உருவாக்கியுள்ள தினேஷின் ஆர்வம் பிரமிக்க வைத்தது. - மயிலை கோபி, அசோக்நகர்; ஜெரிக், கதிர்வேடு; முருகேசன், கங்களாஞ்சேரி; நரசிம்மராஜ், மதுரை; பூதலிங்கம், நாகர்கோவில்; நவீன்சுந்தர், திருச்சி.
இளநீர்க்குடுவையில் செடி என்ற கலைமணியின் பசுமை ஐடியா அசத்தல். - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; சித்ரா, திருவாரூர்; ஜானகி விஸ்வநாதன், சென்னை.
பெண்களின் டீ ஷர்ட் வரை தமிழ்மொழியைக் கொண்டுவந்து இளைஞர்களை வாசிக்க வைக்கும் துர்கா கோபிநாத்தின் முயற்சியை வாய்விட்டு பாராட்டலாம்! - பிரதீபா ஈஸ்வரன், சேலம்; விஜயலெட்சுமி, திருச்சி; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; கைவல்லியம், மானகிரி.
ஆடம்பரமில்லாத அறுசுவை ஹோட்டலான புத்தூர் ஜெயராமனின் பெருமை சிங்கப்பூர் வரை புகழ் பெற்றிருப்பதற்கான காரணத்தை விவரித்திருப்பது நன்று. - தேவதாஸ், பண்ணவயல்; ராமகண்ணன், திருநெல்வேலி; காந்திலெனின், திருச்சி; நவீன்சுந்தர், திருச்சி; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; தேவா, கதிர்வேடு; முத்தமிழ்செல்வி, புதுக்குடி.
கோடி ரூபாயையும் கட்சிக்கு கொடுத்துவிட்ட நல்லகண்ணுவின் மனம் மதிப்பு கூற முடியாத அரிய வைரம்தான். - ஏ.நவாப், திருச்சி.
சுருக், நறுக்கென்ற ‘சுடர்விளக்கு’, ‘உடைபடும்’ கவிதைகளால் ‘கவிதை வனம்’ ஆச்சர்ய அழகாக மனதில் பதிந்தது. - பூதலிங்கம், நாகர்கோவில்; சேவுகப்பெருமாள், பெருமகளூர்; முத்துவேல், கருப்பூர்.
ரைட் டூ டச் அமலாபாலை ரசித்து, 76ம் பக்கத்தில் கிளுகிளு தமன்னா, உப்பல் அனுஷ்கா ஸ்டில்ஸ் பார்த்து நடிகை மீது அமர்ந்த இயக்குநர் செய்தி படிக்கும்போது, உம்மை தரதரவென இழுத்துப் போட்டு மேலே உட்காரத் தோன்றியது. - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
மூன்றாம் உலகப்போரை மெகா ஹாலிவுட் படம் ரிலீசாவது போல சொல்கிறீர்களே? நெஞ்சம் பதறுகிறது ஐயா! - த.சத்தியநாராயணன், அயன்புரம்; முத்து வேல், கருப்பூர்.
உதடு ஆசையில் உயிரே போகுமா? லிப் பிளம்பர் கட்டுரையின் தகவல்கள் ஆயுள்பீதி தந்தன. - நரசிம்மராஜ், மதுரை; பாக்கியவதி, மேக்கா மண்டபம்.
ஜகஜாலக் கில்லாடி இயக்குநர் எழிலின் புது ஆபீஸ் சந்தோஷம் விஷ்ணு - நிவேதா ஸ்டில்களின் ஒவ்வொரு இன்ச்சிலும் பளீரிட்டது! - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
|